சனி, டிசம்பர் 24, 2011

தேவனின் திருவிளையாடல் :-


பணம் படைத்த அவன்.,
பாவமும் நிறைய படைத்திருந்தான்!!!!
கிறிஸ்துமஸ் கொண்டாட,
குடும்பத்தோடு வெளிநாடு
சென்றான்!!!

பணம் இல்லாத அவள்,
சொந்தமும் இல்லாமல்.,
சோகத்தில் இருந்தாள்,
தள்ளாத வயதும்,
துவண்ட தேகமும்.,
சிரமம் தந்தாலும்.,
ஏக்கம் தான்,
ஏக குடைச்சல் தந்தது...

கிறிஸ்துமஸ் தாத்தா,
வருகைக்கு காத்து நின்றான் அவன்..
கிறிஸ்துமஸ் வாழ்த்து
சொல்லக் கூட
ஆள் இல்லாமல்.,
வாடி இருந்தாள் அவள்!!!

புத்தாடையும் விருந்துமாக,
பூத்திருந்தான் அவன்!!!

பழைய ஆடையில் உள்ள
கிழிசலை தைத்து,
அவனுக்கு பாலூட்டிய
தன் மார்பில் வழியும்
சோகம் மறைத்து.,
" கிறிஸ்துமஸ் திருநாளில்.,
தேவன் உன்னை
ஆசிர்வதிக்கட்டும் மகனே!!! "
மனதுள் முனுமுனுத்தாள்!!!

அவளை முதியோர் குடிலில்.,
சேர்த்த நினைவு கூட இன்றி.,
கிறிஸ்துமஸ் களிப்பில் இருந்தான்
அவன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக