சனி, டிசம்பர் 17, 2011

திருட்டுச் சிறுக்கி!!!ஊருல இருக்கிற  
ஊழல்காரங்க மேல எல்லாம்., 
"சொத்துக் குவிப்பு" வழக்கு
போட்டாங்களே!!!
என்ன மட்டும் விட்டாங்களே ??!
ஏன் மச்சான்??!!

திருடி வச்சிருக்கேன்.,
உங்க இதயத்த.,
உருவி வச்சிருக்கேன்,
உங்க பாசத்த.,
பதுக்கி வச்சிருக்கேன்.,
கள்ளப் பணமா.,
கோடிக் கணக்குல.,
உங்க கை நெகத்த.,

இத்தன செஞ்சும்.,
திரும்பாமப் போறீகளே..,
திமிரு புடிச்ச என் மாமா...
ஆசையா கூப்பிடுங்க.,
" திருட்டுச் சிறுக்கி" னு
தேடி வரேன் 
உம் தாகத்துக்கு!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக