புதன், டிசம்பர் 07, 2011

கனவு கண்டேன் :

கனவு நினைவாக வேண்டாம்...
என் கனவு நினைவாக வேண்டாம்..
நேற்றிரவு., நித்திரையின்
நடுவே...
நடுங்க வைக்கும்.,
குருதியை உறைய வைக்கும் 
கனவு...

தெருவில் நின்று 
தோழியிடம் திறமையாக 
கதை பேசிக் கொண்டு இருந்தேன்
அந்தக் கனவில்.,

அவ்வழி வந்த.,
ஆடைகள் கிழிந்த.,
அழுக்குத் தோற்றத்துடன்.,
நரை தட்டிய.,
அந்தப் பிச்சைக்காரன்...
என்ன நினைத்தானோ..
கையில் இருந்த தடியால்.,
கண் இமைக்கும் நேரத்தில்.,
கபாலத்தில் அடித்து விட்டான்.. :( 
மயங்கி விழாமல்.,
தூக்கம் தெளிந்தது எனக்கு..

கனவு நிஜமாக வேண்டாம்.. 
வேண்டாம்..!!! :( :(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக