செவ்வாய், டிசம்பர் 13, 2011

காதல் தீது??!!!
சுள்ளி பொறுக்கும் சிறுவனைப் போல.,
சுறுசுறுப்பாய் இருந்த உன்னை.,
சுகமாய் உறங்கும் தெருவோர ,
பிச்சைக்காரன் போல.,
சோம்பேறியாக்கி .,
கடமைகள் செய்யாமல்.,
கட்டிலில் கிடத்தி.,
கற்பனையாய் உன் வாழ்வை மாற்றினால்.,

நொடி நொடியாக.,
நீ "உழைக்க" வேண்டிய வயதில்.,
நல்ல "ஊதாரியாக" மாற்றினால்.,

கை பேசியே கடவுளாகி.,
கார் இரவெல்லாம்.,
விழித்துக் கிடந்து.,
முத்த அர்ச்சனைகளோடு.,
கை பேசி பூசை நடத்தினால்.,

நேரமெல்லாம் வீணாகி.,
இறுதியில்.,
அவளும் நிரந்தரம் இன்றிப் போனால்.,
காதல் தீதே.,
உன் உழைப்பை உறிஞ்சி .,
உன்னை சக்கையாக்கிய.,
அந்தக் காதல் தீதே!!!

( உழைக்க வைத்து உன்னை உச்சம் சேர்க்கும்.,
உண்மைக் காதல் தீதல்ல தோழா!!
"ஆனால் இன்று பலரது காதலும் உச்சம் சேர்ப்பதாய் இல்லை" என்பதே வருத்தத்திற்கு உரியது  :( 
உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!! )


2 கருத்துகள்: