முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#18

முந்தைய பாகங்கள்:   

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12 | #13 | #14 | #15#16 | #17


முரளி தன் தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தான். அவனுக்கு முன் சுவரில், ரேணுகா ஊருக்குக் கிளம்பும் முன் வாங்கித் தந்த ஓவியம் தொங்கிக் கொண்டு இருந்தது.

-----------------

முரளி தில்லிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தினம்.

விரைவாகக் கிளம்பிக் கொண்டு இருந்தாள் ரேணுகா, "சீக்கிரமாப் போய் வாங்கிட்டு வந்துடனும்.. நல்ல பரிசா வாங்கிட்டு வரணும் முரளிக்கு புடிக்கணும், என்ன வாங்கறது... சரி கடைல போய் நல்லதாப் பாத்து வாங்கலாம்.." எண்ணியவாறே வீட்டை விட்டு வெளியே வந்தாள் ரேணுகா.

அது சென்னையில் பிரபலமான, பரிசுப் பொருள் விற்பனை செய்யும் இடம், உள்ளே நுழைந்தாள் ரேணுகா.

அழகழகாக வித விதமாக இருந்தன பரிசுப் பொருள்கள். பெரும்பாலும் எல்லாப் பொருள்களுமே காதலன் காதலிக்குக் கொடுப்பதற்கு ஏற்றதாயும் தோழமையை வெளிப்படுத்தும் விதமாகவுமே இருந்தன. ஒரு பகுதியில் இருந்தது, அம்மா மகனுக்குக் கொடுக்கும் வண்ணம், அழகாகவரையப் பட்ட ஒரு ஓவியம். ஒரு ஏழைத் தாய் , கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடையுடன், குழந்தையை தனது ஆடைக்குள் வெயிலில் இருந்து காத்துக் கொண்டு, கண்ணீரோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அந்த ஓவியத்தைக் கையில் எடுத்தாள் ரேணுகா, அதில் ஏதோ தோன்றியது அவளுக்கு, கண்ணீர் வந்தது, தன்னையும் தன் மகனையும் தான் அந்த இடத்தில் நினைத்துப் பார்த்திருப்பாள்.

கண்ணீரை யாரும் அறியாதவாறு துடைத்துக் கொண்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றாள். சற்று அதிக விலையாகத் தான் இருந்தது. நிறைய விலை கொடுத்து வாங்கினாள். இதுவரை எத்தனையோ பரிசுகள் வாங்கிக் கொடுத்து இருந்தாலும், இது விசேசமானது என்று அவளுக்குள்ளே தோன்றியது. அந்த ஓவியத்தில் இருந்த கண்ணீர் விடும் தாயின் அன்போடு, ரேணுகாவின் அன்பும் சேர்ந்திருந்தது.

அன்பு வலிமையானது, அன்பானவர்களின் நெருக்கம் என்றும் பரவசம் தருகிறது, தூரமோ மாறாய் வலிகளைத் தருகிறது. முதல் முதலில் அம்மாவை விட்டுத் தனியாக உறங்கிய இரவு உங்களுக்கு நினைவில் உள்ளதா? அம்மாவின் கதகதப்பு, அம்மாவின் வாசனை, அதை விட்டுத் தள்ளிப் போய்ப்படுத்திருந்த அனுபவம்? முதலில் அந்தத் தனிமை, வெறுமை, கடினமாகத் தான் இருக்கும் எந்தக் குழந்தைக்கும். வளர்ந்திருந்தாலும், நீங்களும் நானும் அம்மாவின் செல்லங்கள் தானே என்றும். எல்லா உறவுகளைக் காட்டிலும், நெருக்கமான உறவு, அனைவருக்கும் அவர்களது தாயாகத் தான் இருக்க முடியும்.

கடையை விட்டு வெளியே வந்தாள், தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள் தன் கையில் இருந்த ஓவியத்தை அணைத்தவாறே. திருப்பத்தில் எதிர்பாராத விதமாய் ஒரு சரக்குந்து ரேணுகாவின் மீது இடிக்க, அந்த இடத்திலேயே உயிர் நொறுங்கிப் போகிறது அவளுக்கு.

அந்த விபத்திலும், ஓவியத்தை அணைத்தவாறே இருந்தாள் ரேணுகா. அவளது இறுதிப் பரிசாக அது இருக்கும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை, அணைத்தவாறே சரிந்து கிடந்தாள்.

அம்மா மட்டுமே தெரியும் முரளிக்குச் சின்ன வயதிலிருந்து. அன்று அவன் எப்படி நொறுங்கிப் போனான் என்பதைச் சொல்ல வார்த்தைகளுக்கு வலிமை இல்லை. ஒரு மாதம், அந்த ஓவியத்தை அணைத்தவாறே அறைக்குள் முடங்கிக் கிடந்தான். தன் காதலியிடம் கூட சொல்லவில்லை தன் தாய் இறந்ததை.

தன்னைச் சோகமாக அவள் பார்த்து வருந்துவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு மாதம் சென்ற பின்னர், என்ன நடப்பின்னும் தான் இப்படி அமர்ந்திருப்பதால் எதுவும் திரும்பப் போவதில்லை என்பதை நினைத்து இயல்புக்குத் திரும்ப முயற்சித்தான்.

யார் இருக்கிறார்கள் அவனுக்கு? அன்பான தாய்க்குப் பின் தந்தை இருந்திருக்க வேண்டும், ஆனால் இல்லையே. சிந்து மட்டுமே இருந்தாள். சிந்துவைக் கண்டால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று எண்ணினான்.தன் லட்சியம் நோக்கிப் புறப்பட்டான். ஊருக்குக் கிளம்பும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சிந்துவிடமே இந்த சோகத்தைப் பகிர்ந்து கொண்டான், அதுவும் அங்கு வந்த பின்னர் தன்னிடம் எதுவும் கேட்கக் கூடாது இது பற்றி யாரும், என்ற நிபந்தனையுடன். தான் அடையும் வேதனை யாருக்கும் தெரியக் கூடாது என்று எண்ணினான்.

-----------------

காதலியைக் கடைசி வரைச் சேராமல் போனார் ராமச்சந்திரன். ஆனால், அன்புக் காதலியாய் ரேணுகா என்றும் தன் காதலனோடு அருகிலேயே இருந்தாள்.


முரளியும் ராமச்சந்திரனும் அன்பாய் இருப்பதைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள் ரேணுகா. ஆம், ரேணுகா. அன்போடு, அழியாத அன்போடு.

முற்றும்.
-----------------
நீங்கள் நினைத்ததுண்டா? என்றோ இறந்து போன உங்களது தூரத்து உறவினர்? உங்களது தாத்தா? பாட்டி? உங்களுக்குக் மிக நெருக்கமாய் இருந்து இறந்து போனவர், இன்றும் உங்களுக்கு அருகே அமர்ந்து நீங்கள் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதாய்?

ஆவிகள் ஆத்மாக்கள், என்ன பெயர் வேண்டுமாயினும் சொல்லிக் கொள்ளுங்கள், இறந்த பின்னரும், உங்களது அன்பானவர்கள், கடைசியாய் சுவாசித்த காற்று, அதில் நிறைந்திருக்கும் அன்பு, உங்களை என்றும் பிரிவதில்லை. இப்பொழுதும் கூட, அவர்கள் உங்களுக்கு அருகில் தான் இருக்கிறார்கள், அருகில் பாருங்கள், உணர முடியும் உங்களால்.

அன்பிற்கு, இறப்பு பிறப்பு இரண்டுமே இல்லை! அன்பே தெய்வம்! கண்களுக்குப் புலப்படாது, ஆனால் நாம் இன்று சுவாசிக்கும் மாசுபட்டுப் போன காற்றிலும் கூட, அது நிறைந்திருக்கத் தான் செய்கிறது. அதனால் தான் வாழ்ந்திருக்கிறோம் இன்று நாம்.

கதையின் குறை நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து வாசித்தமைக்கு நன்றி.

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
என்றும் உங்கள்,
கண்மணி அன்போடு!



கருத்துகள்

  1. I've been to your post Kanmani, but I'm sorry I couldn't understand the script.(It looks lovely though:) Thanks a lot for voting for my posts. I'm obliged:)

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கதையை முழுமையாக படித்தேன் , கதைக்களம் பழையது ஆனால் தங்களின் நடையில் அது புத்துயிர் பெற்றுள்ளது ,வாரணம் ஆயிரம் திரைப்படம் தங்களின் கருத்தை மையமாக கொண்டது தான்,நம் உயிரோடு ஒன்றாக கலந்து
    உயிராகி போனவர்கள் இறந்த பின்னும் இன்னும் இருக்கிறார்கள் உண்மைதான் .பாராட்டுக்குள் தோழி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்