செவ்வாய், மே 01, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#2

பாகம் 1 --> காதலி காதலி!#1
படிச்சிட்டு இங்க வாங்க.

"அம்மா, அப்பா எப்போமா வருவாங்க?", வருத்தமும் ஏக்கமும் கலந்து கேட்டான் முரளி.

"அப்பா வருவாங்கடா..,, சீக்ரமா வருவாங்க, வரப்போ உனக்கு நெறைய வாங்கிட்டு வருவாங்க.. இப்போ நீ சமத்தா school-க்கு போயிட்டு வா", சிரித்து வழி அனுப்பினாள் முரளியை.

அனுப்பி வீட்டுக்குள் நுழையும் பொழுது, தினமும் இருக்கும் அதே வெறுமை அவளைக் கொன்றது. தனது நிலையை எண்ணி ஏங்க நேரமின்றி, அரை மணி நேரத்தில் அவசரமாய் வீட்டையும் சுத்தம் செய்து, குளித்துக் கிளம்பினாள் வேலைக்கு.

மாலை:
பள்ளிப் பேருந்து முரளியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. அயர்ந்து போன முகத்தோடு பேருந்தில் இருந்து இறங்கினான். தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டைத் திறந்தான்.

முகம் கை கால் கழுவி சுத்தம் செய்து அடுப்படிக்குச் சென்றான்.
காலையிலேயே வாங்கி வைத்த பால் ஒரு ஓரமாய் அடுப்படியில் இருக்க, அதை மீண்டும் காய்ச்சினான், முரளி. cupboard-ல் இருந்த biscuit packet ஐ எடுத்து சாப்பிட்டு, பால் குடித்தான். அம்மாவுக்காக flask-ல் பாலை எடுத்து வைத்தான்.

வாசலில் சென்று புத்தகத்தோடு அமர்ந்து அம்மாவின் வருகைக்காக காத்திருந்தான், முரளி.


பள்ளியில் தன் நண்பன் சுரேஷ் சொன்னது முரளிக்கு நினைவுக்கு வந்தது.

பள்ளியில்:
சுரேஷ் பள்ளிக்கு புதுவரவு. இருவரும் அறிமுகம் ஆன பின்பு, பேசத் தொடங்கினார்கள்.

"ஏய் உன் bag நல்லாருக்குடா, எங்க வாங்குன?", முரளி சுரேஷிடம் கேட்டான்.

"எங்கப்பா U.S-ல இருக்காங்கடா, அங்க இருந்து அனுப்பினாங்க."

"எங்கப்பாவும் அங்க தான் இருக்காங்கனு அம்மா சொல்வாங்கடா. ஆனா நான் பேசினது கூட இல்ல, எங்கப்பாக்கு நேரமே இருக்காதாம், பெரிய வேலையாம்."

"அப்படியா, எங்கப்பா தினமும் எங்கிட்ட பேசுவாங்கடா., ஆனாலும் மித்த பசங்கள பாக்றப்போ, நான் அப்பா கூட இல்லியேன்னு வர்த்தமா இருக்கும். உனக்கு இருக்காதாடா? நீ பாவம், பேசனது கூட இல்லல?"

"ஆமாடா, எங்கம்மாகிட்ட போன் பேசணும்னு சொன்னாலும், அது முடியாதுனு திட்டிடுவாங்கடா.."

" வருத்தப் படாத, இவ்ளோ நாள், நான் எங்கப்பாவ ரொம்ப miss பன்னேன்டா, next week எங்கப்பா foreign-ல இருந்து வராங்கடா. இனிமேல் அப்பாவ நேர்ல பாக்கலாம் நான், daily phone-ல பேசிட்டே இருந்தேன், இனி அப்பாவ நேர்லயே பாக்கலாம். உங்கப்பா எப்போடா வராங்க? நீ போன்ல கூட பேசனது இல்லேல? எப்போடா வருவாங்க?", சுரேஷ் முரளியிடம் கேட்டான்.

"சீக்கிரமா வருவாங்கடா.."

நினைவு கலைந்தது முரளிக்கு.முரளி அப்பாவைப் பார்க்க ஏங்கினான்... தூரத்தில் அம்மா வருவது தெரிந்தது, இன்னிக்கு அம்மாகிட்ட கேட்டு, அப்பாகிட்ட பேசிடனும், முடிவு செய்து எழுந்தான் முரளி.

புன்னகையோடு அம்மாவை நோக்கி ஓடினான். ரேணுகாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்..
---------------------------------------------------------------------------
பேசினானா முரளி தன் அப்பாவிடம்? நாளை வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக