வெள்ளி, மே 04, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#5

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4 

ரேணுகாவின் வீட்டில்:


"அப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா..", ரேணுகா.

"ஏன்? இப்போ கல்யாணம் பண்ணிக்க என்ன வந்துச்சாம்?", முருகானந்தம்.

"இல்லப்பா.. நான் மேல படிக்க போறேன்பா, மேல படிச்சா இன்னும் நல்ல வேல கெடைக்கும் பா.."

"நீ பெரிய வேலைக்கு எல்லாம் போக வேணாம், ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு மாப்ள வீட்ல சொல்றத கேட்டு நடந்துக்கோ."

"அப்பா.. எனக்கு தான் வேணாம்னு சொல்றேன்ல.." கோபமாய்க் கத்தினாள் ரேணுகா.

"என்ன எவனையும் காதலிக்கிறியா? காதல்-னு சொல்லி எவனையாச்சும் நெனச்சுக்கிட்டு பேசறியா?"

"ஆமா நான் காதலிக்கிறேன், என்னோட கூட படிச்ச பையன, பேரு ராமச்சந்திரன்"

"என்னது? காதலிக்கிறியா? குடும்ப மானம் போகணும்னே எல்லாம் செய்றியா?"

"ஏன்பா? காதலிச்சா தப்பா? ராமு ரொம்ப நல்லவன் பா, என் மேல உயிரா இருக்கான், என்ன சந்தோஷமா பாத்துப்பான் பா"

"சரி என்ன வேல பாக்குறான்? படிப்பு முடிஞ்சி ஒரு மாசம் ஆச்சுல, மொத மாசம் எவ்ளோ சம்பளம் வாங்கிருக்கான்? வேல பாக்குறானா?

"இல்லபா.. அவன் படிக்றான்.. அவனுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகணும்னு ஆச, அதுக்காக படிச்சுட்டு இருக்கான் பா, இப்போ சும்மா பகுதி நேரமா தான் பாக்குறான். இன்னும் ஒரு நாலு வருசத்துல தேர்வாகிடுவான்-பா.."

"ஆமா மாவட்ட ஆட்சியர் ஆகறது எவ்ளோ கடினம் தெரியுமா? அதுக்காக கைல படிக்கிறப்போவே கெடச்ச வேலைய விட்டானாக்கும்? அவன் தேருவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல, நீ நாலு வருசம் காத்திருந்து ஏமாந்து போக தான் போற, பேசாம நான் பாக்குற மாப்ளைய கல்யாணம் பண்ணிக்கோ, ராணி மாதிரி வாழலாம்"

"இல்ல என்னால ராமுவ மறக்க முடியாது", வீடே அதிர கத்தினாள் ரேணுகா.

"முடியாதா? என்னையே எதிர்த்து இவ்ளோ சத்தம் போட துணிச்சல் வந்துடிச்சா? அம்மா இல்லாத பொண்ணுன்னு செல்லமா வளத்ததுக்கு நல்ல பரிசு குடுத்துட்ட", ஓங்கி கன்னத்தில் அறைந்தார் முருகானந்தம்.

அழுதவாறு அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் ரேணுகா.

தந்தையை நினைத்து கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.

ராமுவின் வீட்டில் - இரவு 12 மணி -

எப்படியேனும் தேரிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு, படித்துக் கொண்டு இருந்தான் ராமு.

ராமு, தன் சிறு வயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழந்தவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தான், மிகவும் சிரமப்பட்டு படித்து பொறியியல் முடித்தவன். வாடகைக்கு ஒரு சிறு அறை எடுத்து தங்கி இருந்தான்.
சிறு வயதிலேயே ஒரு பெரிய அதிகாரியாக வேண்டும் என்ற லட்சிய விதையை மனதில் விதைத்து, அதை நாளும் நீர் ஊற்றி வளர்த்து, இன்று விருட்சமாக்கி, பூப் பூத்து நிற்கும் மரத்தை, கனிக்காக தயார் செய்து கொண்டிருப்பவன்.

மிகவும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தான்.

கதவை யாரோ தட்டும் சத்தம்.

"இந்நேரத்துல யாரு..", யோசனையோடு கதவைத் திறந்தான்.

திறந்தவனுக்கு அதிர்ச்சி, நின்றிருந்தது ரேணுகா.


-------------------------------------------------------------------------

ரேணுகா ஏன் அங்கு வந்தாள்? ராமு அவளை வீட்டினுள் சேர்த்துக் கொண்டானா?

வாசிக்கலாம் நாளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக