ஞாயிறு, மே 06, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#7

முந்தைய பாகங்கள்: 


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6 

அதிகாலை ஐந்து மணி, ராமுவின் அலைபேசியின் மணிக்கடிகாரம் அலறியது.

எழுந்து கொண்டான். ரேணுகாவை எழுப்ப அவளைப் பார்த்தான்.

ஆழ்ந்த தூக்கத்தில், அழகுப் பதுமையாய் இருந்தாள் ரேணுகா.

அசையாமல் ஐந்து நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். குழந்தை போல் கள்ளமில்லாமல் தோன்றினாள் ரேணுகா. அவள் அருகில் சென்றான், குழந்தைக்கு தாய் அன்பாய் முத்தமிடுவது போல, அவள் தலை கோதி, நெத்தியில் முத்தமிட்டான் மெதுவாக.

சட்டென்று கண் விழித்தாள் ரேணுகா, "ஏய்.. உன்ன கிட்ட வரக்குடாதுனு ராத்திரி தான சொன்னேன்.. சேட்ட-டா உனக்கு.. போ.. போ.. தள்ளி போ.." செல்லமாய் அவன் தலையை பின் தள்ளி கண் சிமிட்டினாள் ரேணுகா.

"ஏ நான் ஒன்னும் செய்ல ரேணு, நீ கொழந்த மாதிரி அழகா தூங்கிட்டு இருந்த, பாசமா ஒரு முத்தம் வச்சேன் நெத்தில, அது தப்பா?"

"ம்ம்.. என்ன மொத கல்யாணம் பண்ணிக்கோ, அப்புறம் இதெல்லாம் செய்லாம்"

"ஆமா ஆமா ஒரு முத்தம் குடுத்தேன், அதுக்கு இவ்ளோ பெரிய விவாதமா? சரி சரி சீக்கிரமா குளிச்சுக் கெளம்பு, உங்க அப்பாவ பாத்து பேசிட்டு உன்ன வீட்ல விட்டுட்டு வரேன்."

"நான் தான் அங்க வரமாட்டேன்னு சொன்னேன்ல.. நீ வேணும்னா போய் பேசிட்டு வா.."

"ஏ என்ன பேசற.. இந்நேரம் உங்கப்பா உன்னக் காணோம்னு தேடிட்டு இருப்பாங்க"

"தேடட்டும், நான் இங்க தான் இருப்பேன்னு தெரியும், வருவாங்க பாரு இன்னும் கொஞ்ச நேரத்ல..", விளையாட்டாய் பேசிக் கொண்டு இருந்தாள் ரேணுகா.

"அதான் சொல்றேன், சீக்கிரமா கெளம்புன்னு, அவங்க வரதுக்கு முன்னாடி நான் உன்னக் கொண்டு போய் விடனும், அவங்களா தேடி வந்தா நல்லா இருக்காது ரேணு., சொன்னாக் கேளு, அடம் புடிக்காம கெளம்பு."

"இல்ல, நீ அங்க போய் என்ன விட்டுட்டேன்னா எங்கப்பா நிச்சயமா அந்த பணக்கார மாப்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க.. தயவு செஞ்சு, நீ எங்கப்பா வந்தாலும் என்ன அனுப்பாத ராமு, நான் உன்னோட இங்கவே இருக்கறேன்.."

"அது சரி வராது ரேணு.. இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, என்னோட லட்சியத்த அடைஞ்சதுக்கு அப்றமா தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்றேன், சொன்னாப் புரிஞ்சுக்கோ, இப்போ எனக்கு வேலையும் இல்ல.."

"என்ன விட உனக்கு லட்சியம் தான் பெருசாப் போச்சுல? நீ மட்டும் என்ன கல்யாணம் பண்ணிக்கல.. செத்துடுவேன் ராமு?", வேகமாய் ஓடிச் சென்று, அடுப்பின் அருகே இருந்த கத்தியை கையில் எடுத்து கையை வெட்டிக் கொண்டாள் ரேணு.

விளையாட்டாய்ப் பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தா ராமு அதிர்ந்தான், குருதி ஆறாய் வழிந்தது ரேணுவின் கையில் இருந்து, ஓடிச் சென்று அவளது கையில் அருகில் இருந்த துண்டை வைத்துக் கட்டினான், அவளை நாற்காலியில் அமர்த்தி விட்டு, "இரு ரேணு ஒரு அஞ்சு நிமிசம், வரேன், பக்கத்துல வண்டிக்காரர் இருக்காரு கூட்டிட்டு வரேன்.

ஓடினான் பக்கத்து வீட்டை நோக்கி, கதவை படபடவென தட்டினான், கண்ணீர் கடலாய் வழிந்தது அவனது கண்களில் இருந்து அவனை அறியாமலே.

கதவைத் திறந்தார் அந்த வீட்டுக்காரர், " அண்ணே, அவசரமா வண்டி வேணும்னே, ரேணுகா கைய வெட்டிக்கிட்டாணே , பட படத்தான்".

"பொறுப்பா தம்பி, என்னாச்சு? யாரு ரேணுகா? என்னப்பா சட்டையெல்லாம் ரத்தம்?", ரேணுவின் குருதி அவன் நெஞ்சோரம் சட்டையில் வழிந்து இருந்தது, அதைப் பார்த்துப் பதறியவாறு கேட்டார் அந்த வண்டிக்கார அண்ணன்.

"அண்ணே நான் வெவரமா சொல்றேண்ணே, வாங்கண்ணே அவசரம்ணே  .." கண்ணீரோடு கதறினான்.

"சரி தம்பி நீ போ, சட்டைய போட்டுட்டு வரேன் ரெண்டு நிமிசத்துல, வண்டில போய் உக்காரு."

வேகமாய் ஓடினான் வீட்டுக்குள், "ரேணு, ரேணு, வா வண்டி கூப்ட்ருக்கேன் வைத்தியர் கிட்ட போகலாம்..", அவன் அவளை நோக்கி ஓடினான், ரத்தம் அதிகம் வெளியேறியதால், மயங்கி இருந்தாள் ரேணு.

"ரேணு, ரேணு, ரேணு.. கன்னத்தில் தட்டினான்.."

அரை மயக்கத்தில், "ராமு.. " பேச முயன்று தோற்றுப் போனாள் ரேணு.

குழந்தையாகவே அவளை பாவித்து தோளில் தூக்கிச் சென்று வண்டியில் அமர வைத்தான்.

"யாரு தம்பி இந்தப் பொண்ணு, ஏன் கைய வெட்டிக்கிச்சு?", குழப்பமாய்க் கேட்டவாறே வண்டியை எடுத்தார் குமார்(குமரேசன்) அண்ணன்.

"நான் வெவரமா அப்புறம் சொல்றேண்ணே, கொஞ்சம் வேகமா போங்கண்ணே..", அழுதவாறே பேசினான் ராமு.

"சரி தம்பி கவலப்படாத ஒன்னும் ஆகாது", வேகமாய் செலுத்தினார் வண்டியை.

-------------------------------------------------------------------------

ரேணுகாவின் தந்தை வந்தாரா? நாளை வாசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக