முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#10

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9
அழகாய் விடிந்திருந்தது அந்த நாள். வீட்டின் வாசலில் அழகாய் பிள்ளையார் கோலத்தின் ஊடே நிமிர்ந்து அமர்ந்திருந்தார். பால் காய்ச்சி முடித்தாயிற்று என்று காற்றில் வரும் பால் வாசம் பறை கொட்டியது.

அடுப்படியில் சாம்பார் கொதித்துக் கொண்டிருக்க, காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் ரேணுகா.

அவளது நெத்தியின் முன் ஊசலாடும் கருங்கூந்தல் இன்று வெள்ளையாய் வெள்ளியாய் மின்னியது.

நிமிர்ந்த தேகம் சற்றே தளர்ந்து இருந்தது. தேகம் தளர்ந்தாலும், அவள் உள்ளிருந்த பாசம் தளரவில்லை, அதிகாலையிலேயே முரளிக்காக சமைக்கத் தொடங்கி இருந்தாள்.

நாற்பது வயது கடந்து இரண்டு வருடங்கள் தான் ஓடி இருந்தாலும், ஐம்பது கடந்தவள் போல் தளர்ந்திருந்தாள்.

செடியை விட்டுப் பறித்த மலரும், கணவனை விட்டுப் பிரிந்த பெண்ணும், சீக்கிரம் வாடித் தான் போவார்கள் போலும்.

முரளி பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான். மீசை முளைத்து, மிடுக்காய் வளர்ந்து நின்றான் முரளி. வயது இருபது கடந்து இருந்தான்.பார்த்தவுடன் எந்தப் பெண்ணையும் வசீகரிக்கும் தோற்றம், ஆணழகனாய் மெருகேறி இருந்தான்.பெட்டிக்குள் மடிப்புக் கலையாமல் அடுக்கிக் கொண்டு இருந்தான் தனது உடைகளை.

ராமுவின் நல்ல குணம் அனைத்தும் முரளியிடம் இருப்பதைக் கண்டு ரேணுகா வியந்து வியந்து ரசிப்பதுண்டு. தூரம் சென்றாலும், தந்தையைப் போலவே வளர்ந்து நிற்கிறானே, தந்தையைப் பார்த்ததே இல்லை எனினும் தந்தையின் அச்சாக வளர்ந்திருந்தான் முரளி குணம் அனைத்திலும். சும்மாவா சொன்னார்கள் நூலைப் போல் சேலை என்று.

விளைந்த இடத்தை விட்டு, ஆயிரம் மையில்கள் கடந்து கொண்டு வந்து நெய்தாலும், பருத்தியின் தரம் நூலிலும், நூலின் தரம் சேலையிலும் பிரதிபலிக்கத் தானே செய்யும்.

இதோ, அப்படித் தான், தந்தையைப் போலவே கிளம்பிவிட்டான் முரளியும், தன் லட்சியத்தை நோக்கி. மாவட்ட ஆட்சியர் ஆகும் லட்சியம் நோக்கி.

"அம்மா எனக்கு சாதாரணமா சம்பளத்துக்கு வேல பாக்குரதுல விருப்பம் இல்லம்மா, நாட்டுக்காக மக்களுக்காக ஏதாவது உதவி செய்ற பதவிக்கு தான் போகணும், இது என்னைக்கும் என் மனசுல இருந்த, இருக்குற ஆச, லட்சியம், பணத்துக்காக லட்சியத்த அடமானம் வச்சு வேற வேல பாக்க முடியாதும்மா, என்ன தில்லிக்கு அனுப்பி வைங்கம்மா, நான் அங்க போய் பயிற்சி மையத்துல சேந்து படிக்கப் போறேன். பகுதி நேரமா வேல பாத்து உங்களுக்கு பணமும் அனுப்பறேன்", முரளி பேசி முடித்த பொது, ராமுவே மீண்டும் நேரில் வந்து பேசுவது போல் தான் தோன்றியது ரேனுகாவிற்கு.

பயிற்சிக்காகப் புறப்படும் மகனுக்கு பாசத்தைக் கொட்டி சமைத்துக் கொண்டு இருந்தாள் ரேணுகா.
முருங்கைக்கீரை பொரியல், சாம்பார், ரசம், காரட், வெண்டைக்காய் என ஊரில் இருந்த அனைத்துக் காய் கீரை வகைகளையும் சமைத்துக் கொண்டு இருந்தாள். பாயசம் அப்பளம் என ஒரு பக்கம் செய்து கொண்டு இருந்தாள்.

"அம்மா ஏம்மா இவ்ளோ செய்றீங்க, நான் ஒராளு இவ்ளோ சாப்ட முடியுமா? என்ன ஊருக்கே விருந்தா?", செல்லமாய் கேட்டான் ரேணுகாவிடம்.

"ஆமாடா ஊருக்கே விருந்து.., சும்மாப் போடா, இன்னிக்கு நான் குடுக்கிற எல்லாத்தையும் நீ சாப்டனும், இனி அங்க போய் நல்ல சாப்பாடு எங்க கெடைக்குமோ? பேசாம நானும் அங்க வரேண்டா.. கூட்டிட்டுப் போயேன்.."

"இல்லமா அங்க தங்க வாடக எல்லாம் ரொம்ப அதிகம், எனக்கே என்னோட நண்பனோட அப்பா தான் தங்க அவங்க வீட்ல ஒரு இடம் குடுப்பதாவும், சாப்பாடும் அவங்களே பாத்துக்கரதாவும் சொல்லிருக்காங்க. நீயும் வந்தா நம்ம தங்க சாப்டவே என்னோட பகுதி நேர வேலையோட சம்பளம் பத்தாது, இங்க-னா உங்களுக்கு கொறஞ்ச செலவு தான் ஆகும்.", காரணம் சொன்னான்.

"என்னவோ போடா, எனக்கு நீ என்ன விட்டுப் பிரிஞ்சு போராப்லாயே இருக்கு"

"இல்லமா, ஒரு வருசம் தான், ஓடிரும், நான் வேலைல சேந்ததும் உங்கள கூட்டிட்டுப் போறேன், அது வர சமாளிச்சு தான் ஆகணும்மா இந்தப் பிரிவ"

"சரிடா. முயற்சி பண்றேன்.."

அதுவரை கணவனைப் பிரிந்த துயரையே தாங்க இயலாத ரேணுகா, இன்று மகனையும் பிரியப் போகிறோம் என்றதும், சற்று நொறுங்கித் தான் போனாள். ஆயினும், லட்சியத்தை நோக்கிச் செல்லும் மகனுக்காக தான் இருக்கும் தவம் இது, என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

அன்று ராமுவின் லட்சியத்தை நிறைவேற்ற விடாமல் வேலியாய் தாலி கட்டிக் கொண்டு நின்றது போல், மகனின் லட்சியத்திற்கும் குறுக்கே பாச வேலி போட்டு, மீண்டும் தவறிழைக்க விரும்பவில்லை ரேணுகா.

வழி விட்டு ஒதுங்கி நின்றாள் வலியோடு. பாச வேலியின் முல்லை எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டு, பிரிவெனும் சோகம் தழுவத் தயாராய் நின்றாள்.

வெளியூர் செல்லும் மகனுக்கு தன் கையால் பரிசொன்று கொடுத்து வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று எண்ணினாள், என்ன வாங்குவது என்று பெரும் யோசனையோடு சமைத்துக் கொண்டு இருந்தாள் ரேணுகா.

---------------------------------------------------------------------------

இந்தப் பிரிவு முரளியை வெற்றிப் படியில் மேலேற்றியதா? வாசிக்கலாம் அடுத்த பகுதியில்.

கருத்துகள்

  1. ....செடியை விட்டுப் பறித்த மலரும், கணவனை விட்டுப் பிரிந்த பெண்ணும், சீக்கிரம் வாடித் தான் போவார்கள் போலும்.

    ,,,,விளைந்த இடத்தை விட்டு, ஆயிரம் மையில்கள் கடந்து கொண்டு வந்து நெய்தாலும், பருத்தியின் தரம் நூலிலும், நூலின் தரம் சேலையிலும் பிரதிபலிக்கத் தானே செய்யும்.loved this metaphor...u rock...

    enga amma enna velaiku anupichatha ninachunten...

    பதிலளிநீக்கு
  2. @GowRami Ramanujam Solaimalai: மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்