புதன், ஆகஸ்ட் 11, 2010

கவிதை - நண்பன்

என் மடியில் தவழும் உரிமையும்,
என் மார்பில் தங்கும் இனிமையும்,
என் கைகள் தீண்டும் வாய்ப்பும்,
என்றும் உனக்குத் தந்தேன் .....

உனக்காக ஒன்றும் செய்யாவிடினும்,
உன்னிடம் ஒட்டு மொத்தமாய் பெற்றேன்....


உன்னைப் புரிந்து கொள்வது,
பெரும்பாடாக இருப்பினும்
புரியத்தான் வேண்டும்....
பழகத்தான் வேண்டும்...


உன்னிடம் அனைத்தையும்
அறிய ,
புரிய,
காலம் நேரமில்லாமல்

கண் உறங்காமல்,
நாட்கள் நகர்கின்றன....


உன்னைத் தவிர வேறு எதையும்
உச்சரிக்கவோ, உணரவோ
உள் மனம் அனுமதி தரவில்லை ....
அறிவுப் பெட்டகமே.....

இனிமையான என் நண்பன் நீ ----
என் கணக்குப் புத்தகம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக