வெள்ளி, ஜூலை 08, 2011

உறவுகள் தொடர்கதை :-



பல நெஞ்சங்களை நேசித்த பாசம் உண்டு,
 பல நெஞ்சங்களை நோகடித்த பாவமும் உண்டு,

பல முறை சிரித்த சிலிர்ப்பு  உண்டு,
பூகம்பம் போல வெடித்த  கோபமும் உண்டு,

பல சமயம் பகல் எல்லாம் சிரித்து,
இரவில் மழை பொழிந்த,
கண்களும் என்னிடம் உண்டு...
பல வேளை பாசத்தை உதறி,
பரிகாசம் செய்த அனுபவம் உண்டு, :(

பல அனுபவம் இருந்தாலும்,
சில சமயம் சாமர்த்தியம் போதாத,
சிரமமும்  உண்டு....

புது,
அனுபவமாய் நீ வந்து,
அனுசரணையாய் கை கோர்த்து...
வழி நடத்திச் செல்ல,
வாசலில் காத்து நிற்கும்...
உன் கண்கள் நான்.....

உறக்கம் தொலைத்து,
மூழ்கி விட்டேன்,
உன்னை கற்பனை செய்து....,
உறவுகள் தொடர்கதை, அதில்,
உன் வரவு மட்டும் மலர் மழை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக