முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடிதம்!


அன்புள்ளவனே!

இது உன் அருமைத் தோழி, அழகுத் (கொஞ்சம் ஓவரா இருக்கோ?) தோழி, கண்மணி எழுதும் கடிதம். என்னடா இது தெனமும் தான் பேசறமே எதுக்கு இந்த லெட்டெர், இப்படித் தான் நீ யோசிக்கக்கூடும்! ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறையும் அழகும் உள்ளதே! அதற்குத் தான் இந்தக் கடிதம். அதுவும் எழுத்து வழக்கில் ஒரு அழகுத் தமிழ்க் கடிதம்!

கடிதம் எழுதுவதே பழைய முறையாக மாறி இருக்கலாம்! அதுவும் தமிழில் கடிதம், இன்று மிகவும் அரிது (அரிதுனா அர்த்தம் தெரியுமா உனக்கு? அப்டினா “rare”னு அர்த்தம்)

உனக்குத் தமிழ் அதிகம் வாசிக்க வராது”, என்று எனக்குத் தெரியும், உன் உயிர்த் தோழி அல்லவா நான்? எனக்குத் தெரியாமல் என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றும் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்த்தேன், ஆனால் இன்று ஒன்று உள்ளது, என்று தோன்றுகிறது! என்ன? என்னவென்று சொல்கிறேன், கேள்! (பொறுமையா இரு, எப்பவும் போல, லொட லொடனு எதாவது சொல்லிட்டு தான் மேட்டருக்கு வருவேன்)


இந்தக் கடிதம் நம்மைப் பற்றியது! ஆம். இது உனக்கும் எனக்கும் மட்டும் சொந்தமானது! அதுவும் எனக்குப் பிடித்த தமிழில், எனக்குப் பிடித்த உனக்கு! இதைத் தமிழில் எழுதக் காரணம், ஒன்று எனக்கு தமிழ் தான் ஆங்கிலதை விட சிறப்பாக வரும், இன்னும் ஒன்று, உனக்குத் தமிழ் சரியாக வாசிக்க வராதது. இந்தக் கடிதத்தை வாசிக்க நீ என்னிடம் தான் வருவாய் என்று எனக்குத் தெரியும், நானே, நான் எழுதிய கடிதத்தை வாசித்து உனக்குச் சொல்லும் அனுபவம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிணேன்! (உன்னோட ரியாக்சன நேர்ல பாக்கலாம்ல) அதனால் தான் இந்தக் கடிதம்!

கடும் கோபத்தில் உன்னை திட்டித் தீர்க்க வேண்டும் என்று தான் எழுதத் தொடங்கினேன், ஆனால், திட்ட ஏனோ வார்தைகளே வரவில்லை. ஆனாலும் கோபம், நேற்று நீயும் அவளும் ஒன்றாக “கோக்சாப்பிட்டீர்களே, அதைப் பார்த்ததில் இருந்து, உன் மீது என்பதை விட, அவள் மீது!

சந்த்ரிகா என்றல்ல, என்னைத் தவிர்த்து, நீ எந்தப் பெண்ணிடம் பேசினாலும் கோபம், அத்தனை கோபம்! இதுவரை நீ பேசிய அத்தனை பெண்களையும் ஜென்ம விரோதி போலத் தான் பார்த்துக் கொண்டு அலைகிறேன்!

நீ எனக்கு நெருங்கிய நண்பன் தான், ஆனாலும், அந்த நட்பையும் தாண்டி ஏதோ ஒன்று! உன் மீது! அன்று ஒரு நாள் அழகாகப் பாடுகிறேன் என்று ஒரு பாடல் பாடச் சொன்னாயே? நினைவில் இருக்கிறதா? அதைக் கேட்காமல் ஒரு நாளும் உறக்கம் வருவதில்லை! இப்படி சினிமாவில் கண்ட “சிம்ப்டம்எல்லாம் எனக்கு உண்மையில் நடப்பதைப் பார்த்து, கொஞ்சம் பதறித் தான் போனேன்!

இது வரை என் பெயர் கேட்டதும், “கண்மணி அன்போடு.... பாட்டுப் பாடியவர்கள் தான் அதிகம். ஆனால், இன்று, எனக்கே தோன்றுகிறது, நீ பாட வேண்டும் அப்படி என்று!

எரும, இப்போ புரியுதா, என்ன சொல்ல வரேன்னு? :P

இப்படிக்கு,

கண்மணி அன்போடு காதலி... <3 <3

[குறிப்பு: இது ஒரு கற்பனைக் கடிதம். “திடங்கொண்டு போராடுதளத்தில் நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது.

ரொம்பவே காமெடியா இருந்தாலும், நல்லா இருக்குனே சொல்லிட்டுப் போங்க? :D :P ]

கருத்துகள்

 1. நல்லாருக்கு..
  இதுல அங்கங்க டிங்கரிங் பண்ணி நாங்க பயன்படுத்திக்கறோம்

  பதிலளிநீக்கு
 2. அருமையான காதல் கடிதம் கண்மணி... உடனடியாக உற்சாகமாக போட்டிக்கான காதல் கடிதம் எழுதியது மிக்க மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 3. வெற்றி பெற வாழ்த்துகள்!!!!!!!!
  சொல்லிலும், செயலிலும்...

  பதிலளிநீக்கு
 4. நிஜமாவே நல்லாயிருக்குப்பா...ஆனா என்ன ஒண்ணு எருமன்னுட்டுங்களே அவுகள அதான் வருத்தமாயிருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :P அது சும்மா, செல்லமா சொல்லுறது! :D

   மிக்க நன்றி!

   நீக்கு
 5. எரும, இப்போ புரியுதா, என்ன சொல்ல வரேன்னு? :P

  என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை... இதில் என்னால் கற்பனையைப் பார்க்க முடியவில்லை.

  கடிதங்களே அரிது... அதுவும் தமிழில் கடிதம் மிக அரிது... உண்மை தான்...

  இந்த கடிதம் உண்மையான ஒரு அனுபவத்தை தந்தது...
  வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....
  போட்டியிலும்... வாழ்விலும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) வட போச்சே! கற்பனைக்கும் மதிப்பெண் இருக்குனு சொன்னாங்க! எனக்கு அது கெடையாதா...! :P

   அட, இது உண்மைல போட்டிக்கு எழுதுனது தாங்க!

   நன்றி! :)

   நீக்கு
  2. நம்புகிறேன்....மென்மேலும் உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்

   நீக்கு
 6. காதலே அருமை தான்.. அதனால் அதை வைத்து எழுதும் கடிதமும் அருமையானதாகத்தான் இருக்கும்.. ஒன்றுமே இல்லையென்றாலும் ஒவ்வொரு காதலிக்கும் அவள் காதலன் எழுதும் கடிதம் ஸ்பெசலான ஒன்று தான்.. இதே போல் தான் காதலனுக்கு அவன் காதலி எழுதும் கடிதம் ஸ்பெசல் தான்.. இதில் நாம் எழுதும் காதல் கடிதம் மற்றவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நாம் யாருக்காக எழுதினோமோ அவருக்கு பிடித்தால் போதும்.. போட்டியில் ஜெயித்தாலும் ஜெயிக்கவில்லையென்றாலும் கடிதத்தை 100 ஃபோட்டோ காப்பி போட்டு அனுப்ப வேண்டிய ஆட்களுக்கு அனுப்பிவிடலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்களுக்கா? என்ன கொடும கண்மணி இது!

   நன்றி!

   நீக்கு
 7. ahem ahem... Kanmani... Love letterah illa Kolai miratala?? Asathita....

  பதிலளிநீக்கு
 8. நன்றாக இருக்கிறது கண்மணி!
  ஜூலை 20 வரை காலம் இருக்கிறது. உன்னால் இன்னும் நன்றாக எழுத முடியும். வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா! :) இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும்!

   நீக்கு
 9. சோதனை முயற்சியோ !! ,போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .ஜுலை 20 தான் Last Date ,Try ur best ,,, All the best

  பதிலளிநீக்கு
 10. இவ்ளோ பாஸ்டா பர்ச்டா போட்டிக்கு தயாராகி விட்ட கண்மணிக்கு வாழ்த்துக்கள் !. சோதனை முயற்சியாக பல கடிதங்கள் தங்கள் வலைப்பூவில் குவியும் என்று நினைக்கிறேன் ! :) Try ur best ஜுலை 20 தானே கடைசி தேதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை, இதே கடிதத்தை தான் கொஞ்சம் சரி செய்து வைத்துக் கொள்ளப் போகிறேன்! நன்றி!

   நீக்கு
 11. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா6/12/2013 11:38 முற்பகல்

  ஹா ஹா,வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. கடிதம் நன்றாக இருக்கிறது.... இன்னும் மெருகேற்றவேண்டும்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?
என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.
இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!
சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பா…

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

"என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 
21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)
சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   
சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!
இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் த…

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?
எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!
இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!
என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!
எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!
”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!
அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)
என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.
என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிட…