திங்கள், ஆகஸ்ட் 15, 2011

வீழ்ச்சிகளும் தேவையடா!!!


இரவின் இருளில்,
இருண்டு கிடந்த நாம்.,
இன்று இன்பமாய் ,
இலக்கியம் பேசுகிறோம்;

வெளிச்சம் வந்தாலும்,
வீழ்ச்சிகள் குறையவில்லை,
வீரமும் குறையவில்லை;

இரவும் பகலும்,
என்றும் வருவது போல்,
என்றும் இங்கு,
மேடு பள்ளங்கள்,
தொடர்கதையே...

பகலே தொடர்ந்தால்,
பயனில்லை,
இரவும் வேண்டும்,
இந்த மண்ணிற்கு.

எந்த தேசமும்,
எழுச்சி அடைய,
தவறுகள் தேவை;

தவறுகளில்,
திருத்தம் செய்து,
முன்னேறுவோம்..
முன்னேற்றுவோம்..

வீரம் கொள்ள,
வீழ்ச்சிகளும் தேவையடா
என் தோழா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக