புதன், நவம்பர் 09, 2011

பனியிலும் எரிகிறேன் :


நிஜம் என்ற பெயரில்.,
நான் கூறிய பொய்கள்.,

பொய்களை புன்னகையோடு,
பேசினேன்.., நம்பினாய்..

பொய்கள் சொன்னது.,
உன் நன்மைக்கோ.,
என் நன்மைக்கோ..
அறியேன்..
ஆனால் நன்மைக்கு .,

ஆயிரம் காயம்,
உனக்கு நான் தருவது.,
நன்மைக்கே..

புரிதலை புன்னகையாக்கி
பூவாக பரிசளித்தாய்.,
பேசாமல் புண்ணாக்கினேன், நான்..

நான் சொன்ன பொய்களை .,
எண்ணி பனியிலும் எரிகிறேன்.,
என்னை.. விட்டுச்செல் ., உன்
எண்ணங்களை மறந்தாவது .,
குளிர் காய்கிறேன் இனியாவது...

உன் ரணத்திற்கும் மருந்தாகட்டும்.,
என் பிரிவு..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக