வெள்ளி, நவம்பர் 25, 2011

கற்பது எதற்காக?நாம் பள்ளி சென்றோம்., கல்லூரி சென்றோம்.,
சிலர் தமக்கு விருப்பமானவற்றைக் கற்க.,
பலர் தமக்கு விருப்பமற்றவையைக் கற்க.,
அனைவரும் கற்கிறோம்.,
கல்வி பயில்வதன் பின்னோக்கம்?
பணம்.,? புகழ்? வேலை? வேறு ஏதேனும்?
இருக்கலாம்., ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம்.
கல்வியின் நோக்கம் எதுவாக இருப்பினும்.,
கற்றோர் எதைக் கற்றார்கள் என்பதைப் பொறுத்தே., அதன் வெற்றி.
அனைவரும் கல்லூரி சென்றாலும்.,
நம்மில் எத்துனை பேர் நேயம்., ஒழுக்கம், பற்று இவற்றைப் பெற்றோம்??
கல்வி முறை எப்படி இருப்பினும்.,
நாம் எப்படி இருக்கிறோம்.,?
நம் குணம் என்ன என்பது நம்மைச் சுற்றி உள்ள நட்பிடம் இருந்தும்., பெற்றோர்  உறவினர்களிடம் இருந்தும் தான் கிடைக்கிறது,


சாதி, மதம், மொழி, இனம் என சிறுவயது முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் விதைத்தால்? அதுவே பின்னாளில்  பிரிவினைக்கு வழி வகுக்காதோ? இன்று நான் காணும் பலரும் ஏதேனும் ஒரு வகையில் மற்றொருவர் மீது தாழ்ந்த எண்ணம் கொண்டவராக இருக்கக் காரணம்?
பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கப் பட்டது தானா? தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று பிரிவு ஏன்?


படித்தவனாக இருப்பினும் தேர்தலில் போட்டி இடுபவர் தன் ஜாதிக்காரரா என்று பார்த்து வாக்களிப்பது பரிதாபம் அன்றோ? நல்லவரைக் காட்டிலும் நம்மவர் பெரிது நமக்கு?!!


இந்த மனநிலையை மாற்ற இயலாத கல்வி முறை., நேயம் விதைக்காத கல்வி முறை... கற்பது எதற்கு?? 


பணம்., புகழ்., வேலைக்காக மட்டுமே!!!

 நாம் கற்பது கற்றது மழலைக் கல்வியே மனித நேயத்தைப் பொறுத்த வரை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக