செவ்வாய், நவம்பர் 29, 2011

அம்மா சொன்ன கதை - தவளை ராசா !!!இப்போ உங்க அம்மா கத சொல்ற மாதிரி கற்பனை செஞ்சுக்கோங்க...

ஒரு நாளு குட்டி வயசுல.,
சாப்பிடாம அழுதுகிட்டு இருந்தேன்..
அம்மா கத சொல்ல..
"ஆ,,,"ன்னு கத கேட்டு சாப்பிட்டு முடிச்சேன்...
அது என்ன கத சொல்லட்டா..?!!
அது தான் தவள ராசா கத...

" ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தாளாம்..
அவள கல்யாணம் பண்ண
எல்லா நாட்டு ராசாவும்
ஆசப்பட்டாங்களாம்..!!!
ஆனா அவளுக்கோ யாரையும் புடிக்கலையாம்
அவ தோழிங்க எல்லாரும்,
அழகான ராசாவ கல்யாணம் செஞ்சாங்களாம்..
இவளோ,.. அவள, ஒரு நாள் தண்ணில விழுந்தப்போ,
காப்பாத்துன தவளைய தான்
கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாளாம்...
வேற வழி இல்லாம.,
அவ வீட்லயும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாகளாம்!!!!
கல்யாணம் ஆகி அந்த பொண்ணு ,
அந்த தவள ராசாவ நல்ல பாத்துகிட்டாளாம்
கல்யாணம் ஆகி 30 நாள்ல தவள ராசா.,
அழகான இளவரசனா மாறிட்டாராம்....
அவங்க ரெண்டு பேரும் அடுத்து,
சந்தோஷமா இருந்தாங்களாம்."


நீதி :-அழகா இருக்கிறது முக்கியம் இல்ல.,
அன்பா இருக்கணும்.,
எல்லா உயிரினத்துட்டையும் அன்பு காட்டணும்..
என்ன புரியுதா செல்லம்???

இப்போலாம் சின்ன வயசு சுட்டிகளுக்கு அம்மா எல்லாரும் கதையே சொல்றதில்லயாம், :( பாவம்... :( :( :( 
எல்லாரோட வாழ்க்கையும் இயந்திரத் தனமா மாறிப் போச்சு..
சின்ன சின்ன நல்ல விஷயம் எல்லாம் காணாம போகுது..
இத எல்லாம் தொலைக்காம பாத்துப்போம்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக