புதன், நவம்பர் 23, 2011

பொய் சொல்லும் அழகியே :-நான் பேசிக்கொண்டே இருந்தாலும்.,
பதில் ஏதும் பேசாமல்.,
பார்வையில் வைத்தியம் பார்த்தவளே!!!

பின்னால் துரத்தி வந்தாலும்.,
பார்வை மட்டும் வீசி.,
பொய்யாய் மிரட்டிய இரு விழியே.,

இப்படியே பேசாமல் இருந்திருக்கலாம்.,
ஏனடி பேசினாய்?
பொய் மடல் வீசினாய்??!!

பொய்கள் தொடுக்கும்
உன் வார்த்தைகளை விட.,
மெய் பேசிய அன்றைய
உன் பார்வை ஜாலங்களிலேயே.,
உருகி உருகியேனும் வாழ்ந்திருப்பேன்.,
பொய் பேசி ,
ஏனடி கொன்றாய் என் அழகே? !!
பொய்கள் பேசும் என் அழகே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக