வெள்ளி, நவம்பர் 25, 2011

பாகுபாடின்றி நேசிப்போம் !!!


"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" -- பாரதியார் 

  பெண்களின் நிலை மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயினும் சில இடங்களில் பெண்கள் சில கொடுமைகளை அனுபவித்து தான் வருகிறார்கள். நான் இங்கு பெண்களுக்குச்  சாதகமாய், பெண் உரிமைக்குக் குரல் கொடுக்க முற்படவில்லை.  கிடைத்த 
உரிமைகளையும் , சுதந்திரத்தையும் தவறாகக் கையாளும் சில பெண்களைப் பற்றியும்., பெண்களைத் தாழ்வாக என்னும் சில ஆண்களைப் பற்றியுமே  எழுத முற்படுகிறேன்.


  பெண்களுக்கு எதிரான செயல்கள், கொடுமைகள் இன்றும் பல இடங்களில் நடந்து வந்தாலும்., சில பெண்களால் ஆண்களுக்கே துன்பம் ஏற்படும் அளவிற்கு, சில இடங்களில் பெண்கள் அதீதமாக முன்னேறி இருக்கிறார்கள். ஏதேனும் வெறுப்பு இருப்பின், கணவரின் மீதே பொய்ப் புகார் கொடுக்கும் பெண்கள் இன்று பெருகி வருவதென்னவோ  உண்மை தான். 

  இயற்கையிலேயே, பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களே. ஆண்களின் துணை பல இடங்களில் தேவை தான் எமக்கு. ஆயினும் இதனால் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றில்லை. பெண்ணின் துணை இன்றி ஒரு ஆண் வாழ்வதும் கூட கடினமே. தாயாகவோ., தாரமாகவோ., தங்கையாகவோ., ஏதேனும் ஒரு விதத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆணும் இருக்கிறான். 

   பெண்மை உண்டு ஆண்களிடமும்., ஆண்மை உண்டு பெண்களிடமும்.,
பெண்களின் உடல் பலவீனத்தைக் கொண்டு அவர்களைத் தாழ்வாக ஆண்கள் எண்ணாமல்., ஆண்களை எதிரிகளைப் போல் எண்ணி , அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க பெண்கள் புறப்படாமல்., பாசம் பகிர்ந்து வாழ்ந்தால்., வாழ்க்கை பவித்ரமாக அமையும்.

                        " பெண்மையும் ஆண்மையும் ஒரு சேர உழைப்பின்.,
                          பாரினில் பிரிவுகள் பெருமளவு குறையும்"
                                         "  பாகுபாடின்றி நேசிப்போம் !!! "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக