சனி, நவம்பர் 19, 2011

அக்மார்க் பத்தினி :-

(கணவனின் கொடுமையை பொறுத்து.,
பொறுமை காத்த.,
காவியப் பெண்ணின் குரல்..
இந்தப் பொறுமையே..
வெல்லும் என்றும்..
கெட்டவனும் கள்வனும்.. திருந்தி வருவான்..
தீயோரையும் உருக்கும் அன்பு...)


பச்சருசி சாதம் வடிச்சி.,
பாத்து பாத்து காத்திருந்தேன்.,
பாவி மனுசன் வந்ததுமே.,
போட்டு அடிச்சு என்ன நோகடிச்சான்!!!

பாவம் மச்சான் அடிச்சாலும்.,
பாத மாறிப் போனாலும்.,
நிதமும் பாசமும் பொழிவானே!!!

என்ன கோவம் வந்தாலும்.,
"கொனட்டிப் பேசும் சொல்லழகி ", நீ ,
கொஞ்சுற வார்த்த போதாதோ..
காத்து நிப்பேன் காலமெல்லா ..

உசுரா நெனச்சேன் நான் உன்ன.,
உசுர உசுரே கொல்லாது.,
கும்புட்டு நிப்பேன் எஞ்சாமி .,
கோவப்பட்டு நீ அடிச்சாலும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக