சனி, நவம்பர் 19, 2011

நிழல் தேடி :-நித்தம் ஒரு வண்ணம் காட்டி.,
நிதம் ஒரு வார்த்தை பேசி.,
நீயா ஏமாற்றினாய்...???!!


அன்பின் இரு விழி ஊடே..,
அன்பே,... இரும்பு ஊசி ஏற்றி.,
அறுத்து நீயா விளையாடினாய்???!!


குருதி வழிய.,
கதறி அழுத என்னை.,
கள்வனே., நீயா நெஞ்சில் உமிழ்ந்தாய்??!!


எரியும் உடலில்.,
எஞ்சி இருப்பது.,
என் உயிர் மட்டுமே.,


அதை பிரிய விடமாட்டேன்..
சீக்கிரம் நிழல் தேடி.,
சுவாசம் பெறுவேன்.,


காரணம்., என் ரணம்
களைந்த பின்னால்., உன் 
கண் பார்க்க நேர்ந்தால்.,
பரிசளிக்க., வேண்டும் அதை உனக்கு.


நிழலைத் தேடி...
நித்திரையை விரிக்கிறேன்...
நீ விலகி வழிவிடு ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக