புதன், நவம்பர் 09, 2011

தாமரைக் குளம் :தண்ணீராய் நீ இருந்த நேரம்.,
தினம் நீந்தி ஆனந்தம் கொண்டேன்..

வெயிலின் கொடுமையோ.,
மழையின் வறுமையோ..

மாதங்கள் கடந்ததில்..
மழையும் பொய்த்ததில்.,
நம் உறவும் பொய்த்ததே

வாடினேன்..
நீ வற்றியதும்.,
பறக்கும் பொய்யான உறவு
நானல்ல...

வாடிய வறண்ட உன்னை.,
என்றும் பிரியேன்..
வண்ணம் உன்னிடம்.,
வரும்வரை.,வாடியேனும்
உன்னுடன் ., உறங்கிடுவேன்...
அனுமதி வேண்டி .,
உன் தாமரை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக