சனி, நவம்பர் 19, 2011

தற்பெருமை தவறில்லை :-


காலில் குருதி வடிந்தாலும்
கண்ணில் ஈரம் கசிந்தாலும்..
துவளாமல் நான் பெற்ற.,
துணிவு என் வெற்றி!

தவம் போல் தியாகம் செய்து..,
தினமும் உழைப்பை விதைத்து...
சிறிது சிறிதாய் நான் பெற்ற.,
சீற்றம் என் வெற்றி!

உறக்கமும் குறைத்து.,
உறுதியை விதைத்து.,
உற்சாகமாய் நான் பெற்ற.,
உன்னதம் என் வெற்றி!

தந்தையின் வேர்வையும்.,
தாயின் வாஞ்சையும்.,
கலந்தது என்வீர வெற்றி!

என் வெற்றியைக்கண்டு களிக்கும்
என் நட்பிடம்.,
என் உழைப்பை .,
என் வெற்றியைப் பகிர்வது .,
தற்பெருமை எனில்...
தோழா..
தற்பெருமை, தவறில்லை!!!!

2 கருத்துகள்: