வெள்ளி, டிசம்பர் 02, 2011

தமிழ் எங்கே போகிறது???!!!....

                                                           Photo : Christopher Joseph
                                         

கவனமாகக் கேளுங்கள்!!!
கான்வென்ட் பள்ளியில் .,
கதை சொல்லிப் படிக்க.,
பயனற்றுப் போன நீ...
கடைவீதிக் கட்டிடத்தைக்
காக்கப் பயன்படுகிறாய்?!!!!

என் வீட்டுப் பிள்ளைகளின் .,
வாய் மொழி எல்லாம்.,
வட மொழியாகிப்போன
பின்பும்.,
உன் மீது ஆணை செய்தால்.,
மீற மனம் வராது என்று.,
மிடுக்காக அறிவிப்பு செய்த.,
மனிதரை...

பாராட்டவா? இல்லை..
" ஏனடா ஏமாளி!!!
தமிழை மதிப்போர் இங்கில்லை.,
தவறு செய்தாயடா!!! " என்று.,
வேதனை கொள்வதா?!!!

நீயே விடை சொல்.,
என் உயிர்த் தமிழே...
"நீ எங்கே செல்கிறாய்....??!!!"
சிகரம் தொடவா? சருக்கி விழவா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக