திங்கள், டிசம்பர் 12, 2011

இதய மீன்!!!இதய மீன்!!!

என்னைப் பார்த்து .,
நில்லாமல் போன.,
அவளது கால்கள்.,

பறவைகள் எலாம் கூட,
 அப்படிப் பறந்திருக்காது.,
பட்டாம் பூச்சியாக.,
பவித்ரமாகப் பறந்த.,
பவளக் கண்கள்.,

நீல வானத்தின்.,
மை எலாம் குளித்த.,
அவள் உடை.,

பூக்கள் பூத்து நிற்கும்.,
அவளது காலணிகள்.,
இமயத்தின் நிழலில் .,
வளர்ந்த பனி போல .,
என்னவளின் பார்வை.,

பார்த்ததும் பார்க்காமல் .,
திருப்பிக் கொள்ளும்.,
அவளின் சில்மிஷங்கள்.,

இத்தனையும் என்னை.,
நித்திரை இல்லாமல் செய்ததோடு.,
நீந்திக் கொண்டு இருந்த.,
எந்தன் இதய மீனை.,
ஒரு நொடி.,
நிறுத்தி வைத்த,
நித்யம் என்னவள்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக