வெள்ளி, டிசம்பர் 30, 2011

கோச்சுக்கிட்டேன் போ!!!!                                                 

தலையணைக்கு அழுகை வந்து
திணறிப் போனது 
உன்னால் தான்!!!

கொஞ்ச நேரம் பேசாமல்
ஒளிந்து கொண்டு 
ஓரமாய் ஒதுங்கினேன்!!!

ஐந்து நிமிடம் 
தேடிய பின்பு.,
அய்யோ பாவம் என்,
அம்முகுட்டியின் 
ஆசை முகம் 
வாடிப் போனது!!!

ஓரத்தில் இருந்து எட்டிப் 
பார்த்தேன்...!!!
படபடத்து ஓடி வந்து.,
செல்லமாய் அடித்தாய் என்
பின்னால் முதுகிலே..!!!

பதிலுக்கு ஓடிச் சென்று
கட்டிலில் நான் 
என் தலையணையைக் 
கட்டி அழுக.,

கோபம் வந்து 
உன் தலையணையால்
என் மீது மீண்டும்
உரிமையோடு நீ அடிக்க!!!

தலையணை அழுகுது 
உன்னாலே..
என் தலைக்கனம்  குறையுது 
தன்னாலே!!!

தித்திப்பாய் மீண்டும் மீண்டும் 
வேண்டும் என்று.,
நீயும் நானும் சிறுவயதில் போட்ட
தலையணைக்  கூச்சல்கள்.,

தீராமல் தொடர வேண்டும்..,
என்றும் என்றென்றும்..,
தீயாக பரவும் 
உன் எண்ணம் 
எங்கும் எங்கெங்கும்!!!

2 கருத்துகள்: