
பல ஆயிரங்கள் கொடுத்து
பகட்டாக பயணிக்கும் கூட்டத்திற்கு
புரிய வாய்ப்பில்லை!!!
காசு அதிகம் இல்லாமல்
கூட்டம் சேர்த்து
கூட்டிச் செல்லும்;
நண்பர்கள் கூட்டம்
இடித்துக் கொண்டு;
என் மடியில் நீயும்
உன் மடியில் நானும்
நசுக்கிக் கொண்டு;
ஐம்பது ரூபாய் கட்டணத்தை
ஐந்தாக பகிர்ந்து கொண்டு;
போகிற போக்கில்
புதிது புதிதாக
பாட்டி, தாத்தா,
பெருசு சிறுசு என ,
புதுப் புது மனிதர்களை
ஏற்றிக்கொண்டு,
கைப்பேசியில்,
கடலையை கச்சிதமாக
வறுத்துக் கொண்டு,
பின்னாடி ஓடி வரும்,
பந்தயம் கட்டிய.,
காலை மாட்டு வண்டிகளை
ரசித்துக் கொண்டு,
நான் இருக்க.,
போய்க் கொண்டே இருந்த
அந்த "ஷேர் ஆட்டோ"
திடீரென நின்றது,
" மாமா... வாங்க..
மாப்ள வண்டி வச்ருக்கப்போ.,
நடந்து போலாமா..நீங்க.."
பாசத்தோடு ஓட்டுநர்
குரல் எழுப்ப.,
ஓடி வந்து
ஒய்யாரமாய் அமர்ந்தார்
ஒரு குச்சி மனிதர்..!!!
இத்தனை கூத்தும்.,
இன்பமாய் நடந்து முடிய..
இறங்கும் இடம்
வந்து விட.,
இறங்குவதே பெரும்பாடாகி,
அதற்கு ஒரு போர் நடத்தி.,
காலை வாலாக்கி
மற்றவர் காலை
ஒரு மிதி மிதித்து,
இறங்கிய பொழுது.,
காணாமல் போய்
இருந்தது என் காலணாவும்.,
கைக்கடிகாரமும்!!!
கருத்துகள்
கருத்துரையிடுக