சனி, டிசம்பர் 31, 2011

ஒத்துழைப்போருக்காக !!!


சுய முன்னேற்றம், சுய உதவி.,
மக்களாட்சி !!!
சுயமெல்லாம் ஒன்றாகி.,
கூட்டுப் பொறுப்புணர்வு
கூச்சலாக வெளிவரட்டும்!!!


ஆணோ பெண்ணோ.,
சாதி., மத
பேதம் இல்லாமல்.,
ஒன்றாய் உழைத்திடுவோம்..!!!

உனக்கும் எனக்கும்
தேவையாகிப் போன
ஊரில் உள்ள அனைத்தையும்.,
ஒற்றுமையோடு
பகிர்ந்து பெறுவோம்..!!!

ஒருவரை ஒருவர்
ஏமாற்றாமல்.,
ஊர் வம்பு பேசி
வீணாக்காமல்.,

கற்றுக் கொடுப்போம்.,
கற்றுக்கொள்வோம்...
தொடர் முன்னேற்றத்திற்காகப்
பாடுபடுவோம்..!!!


சிறு சிறு துளிகளாக.,
சேர்ப்போம் முதலீட்டை.,
ஒற்றுமையாக..!!!

மின்மினிப் பூச்சிகளின்
மினுக்கங்கள்
மின்னலாகட்டும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக