செவ்வாய், பிப்ரவரி 07, 2012

கடவுளின் காலடியில்!!!


நூற்றுக்கணக்கில்,
ஆயிரக்கணக்கில்,
எறும்புக் கூட்டம் போல,
தேனிக்கள் கூட்டம் போல!

ஊர்ந்து ஊர்ந்து தான்,
உள்ளே செல்ல இயலும்,
சில்லறை இல்லாத பலரால்!!

நொடியில் நீந்தி,
காலடியில் சேர,
சில "பெரியோர்களால்"
சுலபமாய் இயலும்!


"உன் காலடியிலும்,
கருணையும் பக்தியும்,
கருகி எரியுதோ இறைவா..!
 கற்பூரமாகவும் தீபமாகவும்?"


"ஏழையின்
கண்ணீர் தானோ, இறைவா!!!
பன்னீரும் பால் அபிஷேகமும்?!"

4 கருத்துகள்:

  1. வாருங்கள் கண்மனி அவர்களே நானும் சிவகாசி தான் த்ங்கள் கவிதை மிக அருமையாக உள்ளது. நேரம் இருந்தால் என் வலைப்பூவை பார்த்து பதில் சொல்லுங்கள்.

    http://sekar-thamil.blogspot.in

    பதிலளிநீக்கு