வெள்ளி, பிப்ரவரி 10, 2012

கை கோர்க்க ஆசை!

குருவிகள் குஞ்சுகளை 
கொஞ்சிடும் குளிர் காலம்;
காலையில் நான் எழும்போது,
சாளரத்தின் ஓரம் கீச்சுது கிளிகள்!

தினமும் காலையில்,
தேனாய் எழுப்பும் குரல்! 
காணாமல் போனதே இன்று,
காலம் கரைத்ததே தின்று!

என்னை தூக்கிச் சென்ற கரங்கள்,
தீண்டல் கூட தவிர்கிரதே இன்று!

கைகோர்த்து நடந்து வரும்,
ஐந்து வயது சிறுமியை 
கண் விழி காட்சியாக்கும் போதெல்லாம்,
கொழுந்து விட்டு எரிகிறது,
என் ஏக்கமும்,
நினைவுகளும்!

மீண்டும் சிறுபிள்ளையாகி,
மெதுவாய் உங்களது
மார்பில் உதைக்க,
ஆசை!

கை கோர்த்து,
மிட்டாய் வாங்க ஆசை!

பெண் பிள்ளை கை தீண்ட,
தயக்கம் தந்தைக்கு ஏனோ? :( :( :( 
2 கருத்துகள்:

 1. அன்புத்தந்தையாக...
  வளர்ந்த என் பெண் குழந்தைகளை
  நான் இன்றும் தினமும் முத்தமிடுகிறேன்..
  என்றும் அன்பு குறைவதில்லை..
  என்றும் அவர்கள் என் அன்புக்குழந்தைகளே...


  காலங்கள் போக போக‌
  இருவருக்கும் வயது ஏறலாம்...
  ஆனால் ஒருபோதும்
  உறவு மாறாது..
  அன்பு குறையாது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் பல சமயம்,
   பல நேரங்களில்,
   பல குடும்பங்களில் ,
   தந்தை வளர்ந்த பெண் பிள்ளையிடம்
   தூரம் நின்றே பேசிடும் நிலை உள்ளது! :( :(

   நீக்கு