திங்கள், பிப்ரவரி 13, 2012

காதலனே...! காதல் வேண்டாம்!!!?

உயர்ந்த மரத்தின்,
உச்சிக் கொம்பில்.,
அமர்ந்து கூவுது,
என் மனம்!!!

ஓடும் நதியின்,
தண்ணீர் துளியில்,
சிக்கிச் சுழலுது,
என் மனம்!!

மேகத்தின் ஊடே,
ஒழுகி வழியுது,
கண்ணீராய் மாறிய,
என் மனம்!!

காதல் வேண்டாம்,
காமம் வேண்டாம்,
காகிதத்தில் கிறுக்குது,
என் மனம்!! 

கைகள் கோர்க்க,
நின் கரம் வேண்டாம்,
நெருக்கம் வெறுக்குது,
என் மனம்!!

தினம் வைத்து,
தடுக்க வேண்டாம்,
வாழட்டும் என்றும்,
" நம் மனம் "!!!

2 கருத்துகள்: