புதன், பிப்ரவரி 15, 2012

எனக்காக நான்!!

மழைத்துளி மீண்டும்,
என்னை நான் பார்க்கிறேன்!!! 
மேலே செல்லட்டும்!!

பறவைகளெல்லாம் 
பூக்களாகட்டும்!! 

கடிகார முள்ளில்,
மீன்கள் முளைக்கட்டும்!

இரவில் என் வானம்,
வண்ணங்கள் காணட்டும்!!

மரங்கள் எல்லாம்,
மலர் தூவி பேசட்டும்!!!

இரவே இரவே,
விடியல் விதைக்கட்டும்!!

வசந்தம் பாலையில்,
பூரிப்பு சேர்க்கட்டும்!!

நான் தொட்டதும் சிலைகள்,
உயிரோடு பிறக்கட்டும்!!

என் ஓசை கேட்க,
உலகம் உறையட்டும்!!!

என் கால்கள் தீண்ட,
நட்சத்திரங்கள் மண்ணில் பதியட்டும்!!


2 கருத்துகள்: