வெள்ளி, பிப்ரவரி 17, 2012

கவிதை எழுதும் நேரம்!கட்டுப்பாடோடு கூடிய சுதந்திரம்
---> ஊஞ்சல் போலே!

உயிரில் கலந்த அன்பு
---> மழையில் ஈரம்!

இரக்கம் கொண்ட மனம்,
---> இரவில் நிலா!

தூக்கம் இல்லா இரவு,
--->  தேங்கிய ஆறு!!

உவமைகள் தேடித் தேடியே,
உருவம் இழக்க நேருமோ எனக்கு?

தாவிடும் கடல் அலை போல்,
தேடலும் சிந்தனையும் ஓயாத
எந்தன் மனது தாவுது
உவமை விட்டு உவமை
--->குரங்கோ என் மனம்?!!
சொல்லடி தோழி?

ஏனோ
என் கருத்துக்கும் உவமைக்கும்,
பொருத்தம் தேடி
புலம்புதடி தோழி,
பக்குவம் இல்லா
என் குட்டி மனம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக