முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலில் பதம்!

கருப்பட்டிக்கட்டி போல்,
கடினமானது தான்,
என் மனம்,
முதல் வார்த்தை நீ
மொழியாத வரை!

கசிந்து உருகியதே,
காய்ச்சினாய் காதலால்,
கள்வா, என்னுள்ளத்தை!

முதல் வார்த்தை பேசியதும்,
கம்பிப்பதம் அடைந்தது,
மறுவார்த்தை பேசியதும்,
முத்துப் பதம் கொண்டது!

காதல் நீ சொன்னதும்,
கரைந்தே போனது,
முழுவதுமாய்...!

உருக்கி உருக்கி,
உன் காதலால்,
சாக்லேட் சிலையாய்,
செதுக்குகிறாயே என்னுள்ளத்தை,
உனக்காக, உனக்காக,
செதுக்குகிறாயே என்னுளத்தை,
நீயே உனக்காக!

-----------------------

குறிப்பு:
கம்பிப் பதம், முத்துப் பதம் ---> சீனி அல்லது கருப்பட்டிப் பாகு தயாரிக்கும் பொழுது, உருகிய திரவத்தின் பக்குவத்தைக் குறிக்க பொதுவாக உபயோகிக்கும் வார்த்தைகள்.

கருத்துகள்

  1. அருமையான சொல்லாடல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்

    பல்சுவை பதிவர்கள்

    பதிலளிநீக்கு
  3. //
    உருக்கி உருக்கி,
    உன் காதலால்,
    சாக்லேட் சிலையாய்,
    செதுக்குகிறாயே என்னுள்ளத்தை,
    உனக்காக, உனக்காக,
    செதுக்குகிறாயே என்னுளத்தை,
    நீயே உனக்காக!
    //

    அழகிய கவிதை மற்றும் வரிகள்

    பதிலளிநீக்கு
  4. @ சம்பத்குமார் : அறிமுகத்திற்கு நன்றி! என் போல் புதிதாக எழுதத் தொடங்கியிருப்பவர்களுக்கு, ஊக்கமே அவசியம். அதைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. @ "என் ராஜபாட்டை"- ராஜா : மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கடிதம்!

அன்புள்ளவனே! இது உன் அருமைத் தோழி, அழகுத் (கொஞ்சம் ஓவரா இருக்கோ?) தோழி, கண்மணி எழுதும் கடிதம். ” என்னடா இது தெனமும் தான் பேசறமே எதுக்கு இந்த லெட்டெர் ” , இப்படித் தான் நீ யோசிக்கக்கூடும்! ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறையும் அழகும் உள்ளதே! அதற்குத் தான் இந்தக் கடிதம். அதுவும் எழுத்து வழக்கில் ஒரு அழகுத் தமிழ்க் கடிதம்! கடிதம் எழுதுவதே பழைய முறையாக மாறி இருக்கலாம்! அதுவும் தமிழில் கடிதம், இன்று மிகவும் அரிது (அரிதுனா அர்த்தம் தெரியுமா உனக்கு? அப்டினா “ rare” னு அர்த்தம்) ” உனக்குத் தமிழ் அதிகம் வாசிக்க வராது ”, என்று எனக்குத் தெரியும், உன் உயிர்த் தோழி அல்லவா நான்? எனக்குத் தெரியாமல் என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றும் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்த்தேன், ஆனால் இன்று ” ஒன்று உள்ளது ” , என்று தோன்றுகிறது! என்ன? என்னவென்று சொல்கிறேன், கேள்! (பொறுமையா இரு, எப்பவும் போல, லொட லொடனு எதாவது சொல்லிட்டு தான் மேட்டருக்கு வருவேன்) இந்தக் கடிதம் நம்மைப் பற்றியது! ஆம். இது உனக்கும் எனக்கும் மட்டும் சொந்தமானது! அதுவும் எனக்குப் பிடித்த தமிழில், எனக்குப் பிடித்த உ...