திங்கள், பிப்ரவரி 13, 2012

பருப்பு (nuts) !!!

நேற்று , "ARUN UNLIMITED" குளிர் களி ( ஐஸ் கிரீம்) கடைக்குச் சென்றோம்.

அங்கு நடந்த உரையாடல் :


அப்பா : நாலு கப்(cup) வெண்ணிலா ஐஸ் கிரீம் தாங்க!
அத்தை : பருப்புப் (nuts )போடாம வேணும் எனக்கு!


கடைக்காரர் விசித்திரமாகப் பார்த்தார் அத்தையை! (Nuts என்று சொல்லாமல் பருப்பு என்று சொன்னார்களாம்!!!)

ஒரு நொடி நானே கூட, ஏன் அத்தை " nuts என்று சொல்லி இருக்கலாமே" என்றே எண்ணினேன்!!
:(

வாங்கி விட்டு, வீட்டை நோக்கி பயணித்த போது தான் உணர்ந்தேன்! தமிழில் பேச வேண்டும் என்று நினைக்கும் எனக்கே அந்த இடத்தில் ஏன் அப்படி எண்ணும் சூழ்நிலை ஏற்பட்டது???

அத்தை "பருப்பு" என்று தமிழில் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது??? அதை வித்யாசமாக கடைக்காரரும் மற்றவர்களும் நினைத்தது போல, நானும் கூட எண்ணிவிட்டேனே!!??? வருத்தமாக இருந்தது எனக்கு!

நானும் கூட அவ்வாறு எண்ணியதற்குக் காரணம் என்ன????

காரணங்கள் :

1) பணம் படைத்தவர்களுக்கு மத்தியில், ஆங்கிலம் பேசுவதே மதிப்பு என்று எண்ணுவோருக்கு மத்தியில், ஆங்கிலம் பேசுவதே சிறப்பு!! ---> இப்படியே, நாம் தெரிந்தோ தெரியாமலோ வளர்க்கப்படுகிறோம்!

2) அந்த சூழ்நிலையில், அனைவரும் விசித்தரமாக அத்தையைப் பார்த்ததால் , நானும் அத்தை அவ்வாறு சொன்னது தவறோ என்று எண்ணிவிட்டேன்!

3) ஆங்கிலமே மரியாதை , அவசியம் , என்று பலராலும் நம்பப்படுவது! தமிழில் பேசுபவர்களை ஏளனமாய் பார்க்கும் காலம் இது!

தமிழ் என்றில்லை, தாய் மொழி எம்மொழியாக இருப்பினும், அதில் பேசத் தயங்க வேண்டாம்! அப்படிப் பேசாவிடினும், பேசுபவர்களை ஏளனமாய்ப் பார்க்க வேண்டா!

மொழிகளினால் ஏற்றத் தாழ்வுகள் இல்லை! மொழியே நம் அடையாளம், தமிழன் என்று அடையாளம் கொள்வதில் பெருமை கொள்வோம்!

2 கருத்துகள்: