புதன், மார்ச் 07, 2012

காதலின் நிறம்!

நான் உன் இதயம் தொட்டு,
நீ என் கண்கள் பார்த்து,
பேசிக்கொள்ளும் புரியா
பௌர்ணமியின் வண்ணம்!

பூக்கள் பரிமாறி,
வாசம் களவாடும்,
ஈர ரேகையின் வண்ணம்!

கீழ் வானம் பார்த்து,
கை கோர்த்து நடக்கும்,
சாலையின் வண்ணம்!

ஒன்றாய் சேர்ந்து,
ஏழையின் கை தொட்டு,
கண்ணீர் துடைத்து,
நாம் உதவிடும் நேரம்,
உண்மை உயர்வின் வண்ணம்!

காதலின் வண்ணம் ,
நம் இருவரோடு நிற்காமல்,
கண்ணீர் கலைக்கும்,
புன்னகை விதைக்கும்,
புண்ணியத்தின் வண்ணமாய்
பூவுலகம் சூழும்,
இறைவனின் வண்ணம்!

6 கருத்துகள்:

 1. அன்பு அழகிய வண்ணம்...

  அனால் இங்கு பலர் நிறக்குருடு
  :( nice wordings i love ஈர ரேகை

  பதிலளிநீக்கு
 2. அழகுக்கவிதை வாழ்த்துகள்.

  இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. @ Ramanujam Solaimalai thanks na. உண்மையில் பலருக்கு அன்பின் வண்ணம் தெரிவதில்லை தான்! :(

  பதிலளிநீக்கு
 4. @ DhanaSekaran .S வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு