செவ்வாய், மார்ச் 13, 2012

கொண்டேன்......

உன்னோடு நான் நாணிய நொடிகள்,
சிவந்தேன்...!
"எனக்கே கேட்காமல்,
எனக்கே புரியாமல்,
என்னால் பேச இயலும்"
உன்னோடு மெதுவாய் மெதுவாய்,
பேசிப் பேசியே,
அறிந்து கொண்டேன்!


உலகில் உள்ள சிவப்பெல்லாம்,
ஊற்றினார் போல,
அழகாய் என் கன்னம்
நாணத்தில் சிவக்கும்,
தோழி உன் பெயர்
மொழிந்த நொடியில்,
நாணம் கொண்டேன் !

செல்லக் கோபங்களால்,
சண்டைகள் கூட இனிக்கும்,
கொஞ்சிக் கொஞ்சி,
இனிப்பாய் என்றும்,
நீ திட்டும் திட்டில்,
உணர்ந்து கொண்டேன்!


"உன் கனவுல இன்னிக்கு வந்தேனா?"
உறங்கி எழுந்த மறுநொடி,
நான் உன் கண்ணுக்குள்,
உற்று உற்று,
உண்மை கேட்கும் நொடியில்,
என்னுள் உள்ள சிறுமி,
புரிந்து கொண்டேன்!


நீ என் சோகத் தெப்பத்தில்,
முழுவதும் நனைந்து,
ஈரமாகி ஈரமாகி,
என் சோகம் வற்றிப்போவதால்,
"அழுவதும் சுகம் தான்"
நேசம் கொண்டேன்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக