புதன், மார்ச் 14, 2012

பூ முதல் பெண் வரை!

தினம் தினம் ,
My sweet love flowers just for you!
உன்னைத் தேடித் தேடி,
கண்கள் சோர்ந்து போக!

ஏக்கத்தோடு நான்,
பார்க்கும் பெண்கள் கூட,
உன் போல் தோன்ற!

நிஜமாய் கண்ணா,
நீ நிஜமாய், நேரில் தோன்ற!

"சிச்சி பிரம்மை...",
விலகி நடந்தேன்,
விசித்திரமாக!

என் கூந்தல் சுவாசிக்கும்
பூவெல்லாம் உனக்காக,
உன் கண்கள் சுவாசிக்க,
சூடினேனடா!

உன்னைக் காணாமல்,
நான் வாடியது போல,
கூந்தல் மட்டுமே சுவாசித்து,
நீ சுவாசிக்காமல்,
வாடுது என் தலை ஏறிய,
காதல் பூக்கள்!

பூ முதல் பெண் வரை,
பார்க்கும் அனைத்திலும்,
உன் காதல் முகம்!
நினைவுகள் முழுவதும்,
நீங்கா இடம்!

2 கருத்துகள்: