செவ்வாய், மார்ச் 20, 2012

முகவரி தேடி!!!

ஓடும் பேருந்தோடு சேர்ந்து,
முகவரி இல்லாக்  கடிதம் --> சுமை!
பந்தயம் ஓடும்,
சாலையோர சருகுகள்!!

எதையோ வெறித்துப்
பார்க்கும்,
மரத்தடி முனிவர்கள்!!

புனிதமான பூக்களுள்,
பூரித்துக் கிடக்கும்,
பன்னீர் வாசம்!!

உணவைத் தேடி
எங்கிருந்தேனும்,
ஊர்ந்து வரும்,
எறும்புக் கூட்டம்!!

அவன் முகம்,
பார்க்கும் போது,
சிவந்த பௌர்ணமியாய் மாறும்
என் முகச் சிவப்பு!

கோடி மையில்கள்,
தேடித் போனாலும்,
முகவரி அறியாமல்,
நான் தவிக்கும்
சில இன்பக் கடிதங்கள்!

3 கருத்துகள்: