முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளிகளும் ஆசிரியர்களும்!

நம்மில் பலருக்கும் பள்ளியில் பல சுவாரசியமான அனுபவங்கள் இருக்கும். பல நல்ல பழக்கங்கள், சில தீய பழக்கங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கும் நமது பள்ளிக் கூடங்கள்.

பள்ளிகளில் பல வகை உண்டு. பள்ளிகளில் வகையா? ஆம்!
ஒவ்வொரு பள்ளியையும் அதன் குறிக்கோள்( motto ) அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

1) சில பள்ளிகள், பணத்திற்காக மட்டுமே செயல்படுவதுண்டு.
2) சில பள்ளிகள், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை!
3) சில பள்ளிகள், மதிப்பெண்கள் அதிகம் பெறுவதைக் காட்டிலும், ஒழுக்கமும், நாட்டுப் பற்றும் நிறைந்த மாணவர்களை உருவாக்கும் பணியே சிறந்தது என்னும் கொள்கை உடையன!

இது போல ஆசிரியர்களையும் கூட வகைப்படுத்தலாம்!
முதலடி எடுத்து வைப்போம்!
1 ) இயந்திரத்தனமாய் பாடங்களை நடத்துவோர் (ஒப்பிப்போர்)
2 ) எந்நேரமும் பாடம் தவிர்த்து நக்கல் நையாண்டி என்று தேவையற்ற பேச்சுகளில் நாட்டம் உள்ளோர்.
3 ) ஒழுக்கம், நாட்டுப் பற்று, சமுதாய அக்கறை முதலியவற்றை பாடத்தோடு சேர்த்து புகட்டுவோர்!

பெரும்பாலான நேரங்களில், பெற்றோர்கள் தேர்வு செய்யும் பள்ளிகள், இரண்டாம் வகையைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன. (மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றுவதில் சிறந்தவை!)

காரணம்: நிறைய மதிப்பெண்கள் பெற்றால், பொறியியல், மருத்துவம் சேர்த்து, பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக வெகு விரைவில் பிள்ளைகளை மாற்றலாம்!
பிள்ளைகளுக்குப் பிடித்த ஆசிரியரும் பெரும்பாலும் இரண்டாம் வகையைச் சார்ந்தவராகவே இருக்கிறார்! காரணம் ஆனந்தமாய் இருக்கலாம் அந்த ஆசிரியர் வரும் நேரத்தில்!

ஆனால், நன்மை தருவது, நமக்கு அவசியமானது, மூன்றாம் வகையே!
மதிப்பெண்கள் மட்டுமே போதாது. கற்ற கல்வியை பிறர் முன்னேற்றவும் பயன்படுத்த வேண்டும் என்ற மனப் பக்குவம் தேவை!

கோடிக்கணக்கில் செலவு செய்து மருத்துவம் படிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, கோடிகளை மீட்க மருத்துவம் பார்க்குமே தவிர, சேவை உள்ளத்தோடு அல்ல!போட்ட பணத்தை மீட்கப் போராடும் பந்தயக் குதிரைகளாய் மாற்றும் இந்த நிலை மாற்ற ஆசிரியர்களால் மட்டுமே இயலும்.

மருத்துவமோ, பொறியியலோ, எந்தப் பாடப் பிரிவைச் சார்ந்த ஆசிரியராக இருப்பினும், சிறிது அக்கறை காட்டுங்கள் தங்கள் மாணவரின் சுய சிந்தனைக்காகவும் நாட்டுப்பற்றுக்காகவும்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதாம்! ஐந்து வயது முதல், ஏன், வயிற்றில் கரு வளரும் நாள் தொடங்கி, அன்பை போதியுங்கள்! பெற்றோர்களே பல இடத்தில் சாதி மதம் என்று பேசி, பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் அவலம் பெரும்பாலாக நடந்து வருகிறது.

தவிர்த்திடுங்கள் இவற்றை எல்லாம். அன்பும், நேசமும், நிறைந்த சமுதாயம் நோக்கி முதலடி எடுத்து வைப்போம்!

என்றும் உங்கள்,
கண்மணி அன்போடு    

கருத்துகள்

  1. ஒரு தேசத்தின் தலைமுறையையே தீர்மாணிக்கும் திறன் கல்விக்கு மட்டுமே உண்டு,கல்வியின் நிலையில் ஏற்பட்ட நிலைமாற்றமே நம் சமுதாயத்தின் நிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம்.மதிப்பெண் சார்ந்த கல்வி முறை மாற வேண்டும்.மதிப்பு கூட்டப்பட்ட(Value added)கல்வி முறை அவசியம் நம் நாட்டிற்கு தேவை.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக ஒரு மாற்றம் தேவை! கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்