திங்கள், ஜூன் 18, 2012

காதல் ரோஜா #2

முதல் முறையாக,
நான் ரோஜா நீட்டிய போது,
நீயும் இப்படித்தான்,
உறைந்து போனாய்!

முதல் முதலாக,
உன் இதழ்கள் வருடிய போது,
நீயும் இப்படித்தான்,
சிவந்து போனாய்!

சிவப்பு மாறாத,
வாடிப் போகாத,
ரோஜா,
நீயடி,
என் முதல் அழகி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக