புதன், ஜூன் 13, 2012

ஓவம்மா #3 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்:

ஓவம்மா! #1 | #2

தினமும் நான் வேல முடிஞ்சதும் வீட்டுக்குப் போவேன், போய் அக்கா கிட்ட காசக் குடுத்துட்டு, அக்கா வேல சொல்லுவா. பாத்திரம் தேச்சு, வீடு கூட்டுவேன்.

சில நேரம், பக்கத்து வீட்ல புது டி.வி வச்சுப் படம் காட்டுவாங்க, ஒளியும் ஒலியும் - அதப் பாக்க வாங்குன சம்பளத்தோட போய்டுவேன், வீட்டுக்குப் போனா அக்கா மிதிப்பானு தெரியும், ஆனாலும் எல்லாப் பிள்ளைகளும் போறப்போ எனக்கு ஆச வந்து போய்டுவேன், அப்பறம் அன்னிக்கு ராத்திரி நல்லா அடி வாங்குவேன்.

அப்பறம் அக்காகிட்ட கெஞ்சிக் கூத்தாடி, பக்கத்து வீட்டு பவளக் கொடியோட வெளையாடப் போவேன் தெனமும். பவளத்தோட அப்பா மிட்டாய், முறுக்கு எல்லாம் செஞ்சு விப்பாங்க. பலகாரக் கட வச்சிருந்தாங்க.

அவங்க கடைக்குப் போனா எப்பவும் ஏதாவது கொஞ்சம் சாப்பிடக் குடுப்பாங்க, அதுக்காகவே தினமும் அவங்க கடைக்குப் போவேன். இப்போ நெனச்சா எனக்கே என்னவோ மாதிரி இருக்கு அப்படி சாபட்றதுக்கே போனது, ஆனா என்ன செய்ய தெனமும் ஒரு வேல தான் எங்கக்கா சுடு சோறு போடும், அதுவும் கொழம்பு வைக்காது, ஊறுகாய கடிச்சுக்கிட்டு, புளிச்ச தயிர் ஊத்தி சில நாளு, தக்காளி வதக்கி சில நாளு, வித விதமா சாப்டனும்னு ஆச எனக்கு, அதான், தவறாம பவளத்தோட கடைக்கு ஓடி ஓடிப் போய்டுவேன்.

பவளம் பள்ளிக்கூடம் போவா, நல்ல துணி போட்ருப்பா, தினமும் அவங்க வீட்ல மூனு வேலையும் சுட சுட சமைப்பாங்க, அவளப் பாத்து என்கூட வேல பாக்குற எல்லாப் பிள்ளைங்களும் சொல்லுமுங்க, "பவளம் குடுத்து வச்சவடி.." னு.

எனக்கும் ஒரு ஆச, "ஓவம்மா குடுத்து வச்சவடி.." னு என்னப் பாத்து எல்லாரும் சொல்லனுமுன்னு...

பவளம் என் கூட வேலையாட வருவா தினமும். நாங்க ரெண்டு பேரும் சேந்து கண்ணக் கட்டி வெளயாடுவோம், ஓடி வெளயாடுவோம்.. எங்க கூட நாளு பிள்ளைங்க இருப்பாங்க.

ரெண்டு கூட்டமா இருப்போம். நா இருந்த கூட்டத்துக்கு பவளம் தான் தலைவி, இன்னொரு கூட்டம் விமலாவோடது.

விமலாவும் பணக்காரி தான். அவளும் பள்ளிக்கூடம் போவா. அவங்க அப்பா டீக்கட வச்சிருந்தாரு.

எங்க ரெண்டு கூட்டமும் சேரவே மாட்டோம். அப்படி ஒரு சண்ட வரும். சண்டை சமயத்துல தூது விடுவாங்க என்ன தான் எங்க கூட்டத்து சார்பா. நான் தான் எங்க பவளத்துக்கு நெருக்கம், எப்பவும் என்ன தான் தூது அனுப்புவா.

ஓடை
நான் அசந்து அசந்து பாத்ததுண்டு, பவளத்த, அவ போட்ருக்க துணி, பாசி, பொட்டு, ரிப்பன்... இப்படி எல்லாத்தையும் ஆசையா பாப்பேன்!

அவ தான் தேவத, என் கதையோட கதா நாயகி அந்த சின்ன வயசுல.
தண்ணி அவ்வளவு கிடைக்காது நாங்க தங்கி இருந்த எடத்துல, தெனமும் துணி தொவைக்க மாட்டோம், வாரத்துக்கு ஒரு நாள், எங்க ஊருக்கு பக்கத்துல ஒரு உப்போட இருக்கும், அங்க பஸ் ஏறிப் போய், வாரத்துக்கு ஒரு தடவ, எல்லாத் துணியையும் தொவச்சிடு வரணும்.

நான் தான் எங்க வீட்ல எல்லாரு துணியையும் தொவப்பேன், அப்போ துணி தொவைக்கறது அவ்வளவு சிரமமா எனக்குத் தெரிஞ்சதிள்ள, சந்தோசமா போயிட்டு, தண்ணிக்குள்ள ஆட்டம் போட்டுட்டு, வருவோம் பிள்ளைங்க எல்லாரும்.

என்னதா இருந்தாலும், சின்ன வயசு, கஷ்டமெல்லாம் கஷ்டமாத் தெரியல, அக்கா என்மேல பாசமா இல்ல, அது, பெருசாத் தோனல, வெளையாட்டுப் போக்குல இருந்துட்டு வந்தேன்! ஆனா.. இன்னும் கொஞ்சம் பெருசானதும் தா, கொடூரம்னா என்னனு புரிஞ்சது, ஒரு பொண்ணுக்கு சிரமம்னா என்னனு புரிஞ்சது.

அப்போ எல்லாம் அழுவேன், என்ன தவிக்க விட்டுப் போன, எங்க அப்பாவையும் அம்மாவையும் நெனச்சு நெனச்சு அழுவேன். :'( :'(

------------------------------------------------------------

ஓவம்மா பேசுவாள், அடுத்த பகுதியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக