வெள்ளி, ஜூன் 01, 2012

என்னவோ போல இருக்கு!


பைத்தியம் தான் பிடிக்கிறதோ?
இல்லை, பேசாமல் வலிக்கிறதோ?
"ஒரு அஞ்சு நிமிசம் பேசேன்..?"
கெஞ்சி நான் கேட்டுப் பார்த்தேன்!

என் வார்த்தைகள் தான் கேட்கலையோ?
இல்லை, கேட்டும் அலட்சியமோ?
"வேல இருக்குனு சொல்றேன்ல..!"
கோபத்தால் கொன்று போட்டாய்!

"நீயாப் பேசுற வர பேச மாட்டேன் நானும்"
ரகசியச் சபதம் இதயத்திற்குள் ஓரிரு முறை,
"பேசாம இருக்க முடியாது"
பகிரங்கமாய்ச் சபதம் கலைவது ஆயிரம் முறை!

தினமும் ஒருமுறையாவது உன்,
தீயான கோபக் குரல் கேட்காவிடின்,
ஏக்கத்திலும், சோகத்திலும்,
என்னவோ போல இருக்குதேடா!

தினமும் ஒருமுறையாவது உன்,
தேன் சொட்டும் கெஞ்சல் கேட்காவிடின்,
என் இரவின் உறக்கத்தின் நடுநடுவே,
என் இதயம் பதறி வாடுதேடா!

தினமும் ஒருமுறையாவது உன்,
திகட்டா கொஞ்சல் கேட்காவிடின்,
என் காதணி கூட காதோரம்,
ஏனோ சிணுங்கிக் கொல்லுதேடா!

உன் கோபம் கொஞ்ச நேரம் தான்,
உன் வேசம் கெஞ்ச வைக்கத்தான்,
எனக்குத் தெரியும்,
"என்னவோ போல இருக்குடா"
என் வார்த்தைகள் கேட்காமல்,
உன் உள்ளம் கசக்கும்,
என்னை நினைக்கும்,
என்னவோ போல இருக்கும் உனக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக