
பார்க்காமல் பார்க்கும்,
என் கண்களைக் கேட்டுப்பார்!
உன் அழகைச் சொல்லும்!
உன்னைப் பார்த்ததும் நான் கடிக்கும்,
என் நகங்களைக் கேட்டுப்பார்,
என் நாணத்தை அது சொல்லும்!
என் தனிமையை அறிந்த,
சுவர்களைக் கேட்டுப்பார்,
உன் பெயர் மட்டுமே சொல்லும்!
என்றும் நான் எழுதும்,
என் கவிதைகளைக் கேட்டுப்பார்!
என் காதலைச் சொல்லும்!
இதை நீ வாசித்ததும் முதலில் வரும்,
புன்னகையைக் கேட்டுப்பார்,
நம் காதலின் ஆழம் அது சொல்லும்!
lovely kanmani...
பதிலளிநீக்குஇவை அனைத்தையும் உண்மையில் ரசித்த என் காதல்க்கு ஆழம் தெரியாமல் போயிற்றே.
பதிலளிநீக்குஎன் காதல் புதையுண்ட படிவம் ஆயிற்றே.