வெள்ளி, ஜூன் 08, 2012

தாய்மைக் காலங்கள்!


"நான் தான் அம்மா..."
Toy play!
விளையாடி இருக்கிறேன் - என்
வெள்ளை நிற பொம்மையுடன்.

அவளுக்கு,
தாலாட்டி, சோறூட்டி,
தலை வாரி, பூச்சூடி,
அன்பாக பார்த்துக்கொண்டேன்,
அன்னையாய் என்னை நானே
அன்றே கற்பனை செய்து!

"நான் தான் அக்கா.."
கொஞ்சி இருக்கிறேன் - என்
கருப்பு நிற பதுமையுடன்.

அம்மா அடித்து அழுதபோது,
அந்தப் பதுமைகளுடன்,
அயர்ந்து உறங்கியதுண்டு!
யாருமே இல்லாத நேரம்,
அவர்களோடு நான்,
அன்பாகப் பேசியதுண்டு!

அம்மாவிற்கு வைத்த முத்தத்தை விட,
அவளுக்குத் தான்,
அதிகம் வைத்திருப்பேன்!

பிறந்தது முதலே,
"தாய்மை" பெண்மையிடம் உண்டு,
நினைத்துப் பார்த்ததில்,
புரிந்து போனது!


உண்மைக் காதலுக்கு இன்று
ஒத்திகை காண்பதும் - இந்த
பொம்மைக் காதலோடு தான்!


2 கருத்துகள்: