புதன், ஜூன் 13, 2012

காதல் எனப்படுவது யாதெனில்!பார்த்தவுடன் காதல் சொல்லி,
நினைத்தவுடன் ஊரைச் சுற்றி,
கேட்டவுடன் கைகள் கோர்த்து - ஆசை
துளிர்த்தவுடன் கட்டி அணைத்து,
தீர்ந்தவுடன் பிரிந்து போக,
ஆங்கிலக் காதல் அல்ல இது.

அரை வருடம் பார்வையால் பேசி,
பின்னொரு அரை வருடம்,
அலைபேசி தூது அனுப்பி,
உன் கைகள் தொடாமல்,
உன் மூச்சுப் படாமல்,
தொடுதல் இல்லாமல் - நான் வளர்த்த,
தமிழ் காதல் இது.

நாணம் - உன்னைக் கண்டால்,
நான் பூமியை வருடுவேனே,
அது நாணம்.

காதல் - உன்னை நினைத்ததும்,
கண்கள் படபடக்குமே,
அது காதல்.

உன்னை நேரில் காண்பது
அத்திப் பூத்தார் போல,
என்றோ ஒரு முறை தான்,
ஆனால், கனவில் காண்பேனே,
தினம் தினம்.
அந்த சுகம் வருமோ,
வேறெதிலும்?

"பல்சரில்** ஊர் சுற்றும்,
காதல் ஜோடிகள் பார்!
நீயும் இருக்கிறாயே..",
நீ வருந்திக் கொள்வதுண்டு.
என் கண்ணா,
காதல் ரகசியமானது!

கடைத் தெருவெல்லாம்,
தண்டோராப் போட,
ஊர்த் திருவிழா இல்லையடா - இரு
உள்ளங்கள் மட்டுமே பேசும்,
அழகுக் கவிதையடா அது!

தேகம் மட்டும் தேடுவது,
காதல் அல்ல,
நம் போல்,
பார்வை மட்டும் பேசுவதே,
காதல்!

**பல்சர் - pulsar - இரு சக்கர வாகனம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக