வெள்ளி, ஜூன் 22, 2012

கண்மணிகள் வேண்டுகிறோம்!

கண்களுக்கு மை இட்டு,
சாயம் பூசி,
வசீகரிக்கும் பெண்களே!

கண்களுக்கு கண்ணாடி இட்டு,
அழகு காட்டி,
வண்டியில் பறக்கும் ஆண்களே!

நாளை ஒரு நாள்,
தேடி வரும்,
அழகு எல்லாம்,
அழிந்து போகும்!
அன்றும் உங்கள்,
கண்மணிகள்,
காட்சி காட்டும்!

எதுவும் வேண்டாம்,
நீங்கள் இறந்த பின்,
நீங்கள் முறிந்த பின்,
கண்களை தந்திடுங்கள்,
காட்சியே காணாதவர்க்கு!

மண்ணில் விதைத்தால்,
பூக்கள் பூக்கும்,
விதை அல்ல நம் கண்மணிகள்!
மனிதரில் விதைத்தால்,
காட்சிகள் பூக்கும்,
அற்புத விதைகள் நம் கண்மணிகள்!

"கண்மணிகள் வேண்டுகிறோம்"
விதைத்திடுங்கள்!

கண்களுக்கு மையிடும் பெண்களில்,
நானும் ஒருத்தி!

ஆனால்,
கண்களை மண்ணில் இடுபவர்களில்,
ஒருத்தி அல்ல!

1 கருத்து: