திங்கள், ஜூன் 25, 2012

உடைந்த பொம்மை!

இது என் தோழி சிறுவர்களுக்கு ஏற்றார் போலக் கதை வேண்டும் என்று கேட்டதால் எழுதியது.
அதனால நீங்களும் சிறுபிள்ளையாக உங்களை பாவித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பிங்க.

அன்னைக்கு கமலேசோட அப்பா ஊர்ல இருந்து வந்தாங்க. கமலேசுக்கு அவ்வளவு ஆனந்தம். அப்பா வருவாங்க வருவாங்கன்னு வாசல்லயே
நின்னுட்டு இருந்தான். அவனோட அப்பா ரொம்ப நாள் கழிச்சி, ஊர்ல இருந்து வந்துட்டு இருந்தாங்க. அதனால ரொம்ப ஆசையா இருந்தான்.

வந்துட்டாங்க அப்பா. தூரத்துல அப்பா வண்டி வரத பாத்ததுமே, குதிக்க ஆரம்பிச்சுட்டான். அப்பா அவனுக்காக ஒரு பூனை பொம்ம வாங்கிட்டு வந்திருந்தாங்க. அதுல இருந்து, அந்த பொம்ம தான் அவனோடநெருங்கிய தோழன். தூங்குவான் அது கூட தான், வெளயாடுவான், சாப்டுவான், எல்லாம் அந்த பொம்மையோட தான்.

அது ஒரு பீங்கான் பொம்ம. கீழ போட்டா உடைஞ்சிடும். உண்டியல் மாதிரி காசும் சேத்து வைக்கலாம் அதுல. காசு நெறஞ்சுட்டா அந்த உண்டியல் பொம்மைய ஒடச்சு தான் எடுக்கணும்.

கமலேசும் சேத்து வச்சான் காசு அதுல. முழு உண்டியலும் ஒரு நாள் நெறஞ்சிடிச்சு. அம்மா சொன்னாங்க ஒடச்சு காச எடுடா, வேற உண்டியல் வாங்கலாம்னு. அந்தக் காசு வருமைல இருக்கிற அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு சொன்னாங்க.

ஆனா கமலேசுக்கு ஒடைக்க மனசே வரல. அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் ஒடைக்கல. அந்த பொம்மைய அவன் உசுரா நெனச்சான்.

ஒரு நாள், ரோட்ல நடந்து போயிட்டு இருந்தாங்க அவனும் அவனோட அம்மாவும். அப்போ தெருவுல எல்லாருக்கும் துண்டுச் சீட்டு குடுத்துட்டு இருந்தாங்க சிலர்.

அதா அவங்க அம்மாவும் வாங்குனாங்க. அவன் அம்மா கிட்ட, அது என்னனு கேட்டான்.

அம்மா சொன்னாங்க, இது ஒரு வேண்டுகோள். ஒரு குட்டி பையனுக்கு ஒடம்பு சரி இல்லையாம், அவனுக்கு அறுவை சிகிச்சை பண்ண, ரொம்ப செலவாகுமாம், அதுக்கு உதவி கேட்ருக்காங்க-னு அவங்க அம்மா சொன்னதும், அவன் "நம்ம உதவி செயலாம் மா"னு சொல்றான்.

நம்ம கிட்டயே காசு இல்ல, நம்மளால முடியாதுன்னு அம்மா சொல்லறாங்க.

வீட்டுக்குப் போனதும் உண்டியல ஓடைகிறான் கமலேசு. அவன் முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும், "அம்மா இந்த காச குடுக்கலாம்" னு சொல்லி சிரிக்கிறான்.

அவன இருக்க கட்டிக்கறாங்க அவங்க அம்மா.

நீதி:
நமக்கு பிடிச்ச பொருளா இருந்தாலும், அதால அடுத்தவங்களுக்கு நல்லதுனா, அத நம்ம இழக்கறதுல தப்பு இல்ல.
எதிர் பார்ப்பு இல்லாம, யோசிக்காம உதவனும். நமக்கு இழப்பு ஆகுதேன்னு நினைக்காம, உதவனும்.

2 கருத்துகள்:

  1. கதையைப் படித்ததும், இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருந்த ஈரம் குபுக் என்று கண்களுக்கு வந்துவிட்டது. அருமை !

    பதிலளிநீக்கு