திங்கள், ஜூலை 02, 2012

ஓவம்மா #6 (தொடர்கதை)

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5

சேகருக்கும் எனக்கும் எப்பவும் சண்ட வரும், எல்லாரும் "அடிக்கிற கை தான் அணைக்கும்" மு எங்கள ஏத்தி விடுவாங்க. என்ன செய்ய, அப்போல இருந்து இப்போ வரைக்கும் இந்த கூட இருக்கவிங்க தான் இப்டி உசுப்பேத்தியே ஒன்னும் இல்லாதத, காதலா மாத்திடறாங்க.

ஆனா, என் விசயத்துல அப்டி நடக்கல, நான் நடக்க விடல. எனக்கு வேற மாதிரி கனவுகள் இருந்தது. இந்த தேவைதைக் கதைல எல்லாம் வர்ற மாதிரி, என்னத் தேடி ஒரு ராச குமாரன் வர மாட்டானா.. இப்படி ஏங்கிக்கிட்டு இருந்தேன்.

இது தெரிஞ்ச என்னோட கூட இருந்த பிள்ளைங்க எல்லாம், ஆமா அதெல்லாம் கதைல தாண்டி நடக்கும், உனக்கு நம்ம கடி நாய் தான், இப்படிக் கேலி பேசும்க, ஆனா, எனக்கு மட்டும் என்னவோ, உள்ளுக்குள்ள தோனிக்கிட்டே இருந்தது, ஒரு ராச குமாரன் வருவான்னு. காத்திருந்தேன்.

ஆனா, கடி நாய்க்கும் எனக்கும் இருந்த சண்டை மட்டும் தொடர்ந்துக்கிட்டே இருந்தது.

என்னோட வாழ்க்கைல, இந்தக் கட்டத்துல, எனக்கு நெறைய சோகம் இல்ல, காசு இல்லனாலும், அத்தையோட பாசம் என்ன சந்தோசமா தான் பாத்துக்குச்சு.

எனக்கு வயசு பதினெட்டு, பாக்க ரொம்ப நல்லா இருக்க மாட்டேன், ஆனா ஓரளவு இருப்பேன், நல்ல செகப்பு நான். ஆனா காசில்லாம கொஞ்சம்.. கொஞ்சமில்ல, ரொம்பவே எலும்பும் தோலுமா தான் இருந்தேன். ஆனாலும் பாக்க ஓரளவு இருப்பேன்னு வைங்களேன். என்னையும் நெறைய பேர் சுத்தி சுத்தி வந்திருக்காங்க, உருகிருக்காங்க கொடம் கொடமா.. ஆனாலும், நானே நெனச்சதுண்டு, நம்ம கிட்ட என்ன இருக்குன்னு இவங்க எல்லாம் நமலயே சுத்தி வராங்கன்னு.

என்னோட ராச குமாரன் கனவு மட்டும் நீடிசுக்கிட்டே இருந்தது. என் கூட இருந்த பிள்ளைங்க எல்லாம் என்ன கேலி பேசுவாங்க, இவளுக்கு ராச குமாரன் வரானாம்னு.

நான் சொல்வேன், ராச குமாரன்னா ராசானு இல்ல, நல்ல வேல பாக்குற, படிச்சவன், இப்படி இந்தக் கடி நாய் மாதிரி வெட்டிப் பையன் இல்ல...

ஆனாலும் யாரும் அத ஏத்துக்கல, என்ன ஏசத் தான் செஞ்சாங்க.

நாள் ஆக ஆக எங்க அத்தை எனக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சாங்க, நானும் என் ராச குமாரன் கனவா கை விட ஆரம்பிச்சேன். பணக்காரப் பொண்ணுனா கனவெல்லாம் நெனவாகும். எனக்கு எங்க ஆகப்போதுனு இருந்தேன்.

ஆனா, ஆச்சு, என்னத் தேடி, வந்தாரு.. என் ராசக் குமாரன்.

----------------------------------------------------------------

ஓவம்மாவின் கதை தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக