முந்தைய பாகங்கள்:
ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7
நாள் ஓடிக்கிட்டே இருந்தது. அடுத்து ரெண்டு மாசத்துல எனக்கும் கடிநாயிக்கும் கல்யாணம். எனக்கு அவன் எம்மேல எம்புட்டு உசுரா இருக்கான்னு தெரியும், ஆனாலும், ஆச வரல எனக்கு அவன் மேல.
என்கிட்டே வந்து அவன் சிரிக்கிறதும், கொஞ்சலாப் பேசுரதுமா இருந்தான். பழையபடி இல்லாம, சண்டை போடாம, ஏன் இவன் இப்புடி மாறுனான்? எனக்கு நெனைக்க நெனைக்க ஆச்சர்யம்!
இப்பிடியே போயிட்டு இருந்தது. தெனமும் நான் வேலைக்குப் போயிட்டு வர்றப்போ, எங்கூடவே வருவான். எனக்கு எரிச்சலா இருக்கும். அய்யோ.. இவனப் போய் கட்டிக்க வேண்டியதாப் போச்சேன்னு நெனப்பேன்.
ஒரு நாள் இதே மாதிரி, வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள நொழஞ்சேன், யாரோ வந்திருந்தாங்க, அவுங்க யாருன்னு தெரியாம, முழிச்சிக்கிட்டே உள்ள போயிட்டேன்.
அவங்க பேசுரதக் கேட்டதுக்கு அப்பறமா தான் புரிஞ்சது எனக்கு, அவங்க என்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு.
அங்க என் கூட வந்த கடிநாய், உண்மையாவே கடிநாயா மாறி, வந்த அந்த ஆளுங்க கூட சண்டை போடா ஆரம்பிச்சி இருந்தான்.
வந்த ரெண்டு பேருமே, கொஞ்ச வயசுக்காரங்களா இருந்தாங்க. அதுல கொஞ்சம் செவப்பா முழுக்கால் சட்ட போட்டு, முழுக்கைச் சட்ட போட்ருந்தவர் தான் என்னப் பாத்துப் புடிச்சுப் போய், பொண்ணு கேக்க வந்திருக்றதா சொன்னாரு.
கடிநாய்க்கு வந்த கோவத்துல, ஊரையே கூட்டிடான். "இவ எனக்கு பேசி முடிச்சவ, என்ன தைரியத்துலடா வந்தீங்க...", இப்படி ஆரம்பிச்சு, கேட்ட வார்த்தை சரளமா வந்துச்சு அவன் வாய்ல.
எனக்கு கேக்கவே முடியல. ஊரே கூடிருச்சு. என்னக் கேட்டு வந்த அந்தச் செவத்த ஆழு பெரிய கட வச்சிருக்காராம். நான் துணி தொவைக்கப் போனப்போ, என்ன வழில எங்கயோ பாத்ருக்காரு, புடிச்சுப் போச்சுன்னு வந்திருக்காரு. பணக்காரர். படிச்சவர்.
எங்க அத்தைக்கு என்ன சொல்லனு தெரியல, படிச்ச, பணக்கார மாப்பிள்ளை, குடுக்கலாமானு ஒரு யோசனை, மறுபக்கம், கடிநாய்க்கும் எனக்கும் பேசி முடிச்சாக்கேனு தயக்கம்.
கடி நாய் மட்டும், சும்மாவே இருக்கல, சண்ட, கேட்ட வார்த்த, இதெல்லாம் அவனுக்கு உள்ளயே ஊருனது. சட்டையைப் புடிச்சு, அந்த பணக்கார மாப்பிள்ளைய, அடிச்சான்.
ஊர் காரங்க வெலக்கி விட்டாங்க இவங்க சண்டைய.
"என்னய்யா, இவங்க ரெண்டு பேருக்கும் புடிக்குது சரி, ஆனா அந்தப் புள்ளைக்கு யாரப் புடிக்குதோ, அவங்களுக்குத்தானையா கட்டி வைக்க முடியும், அதக் கூப்புடுங்க.", கூட்டத்துல பெரியாலு ஒருத்தர் இப்படிக் கொளுத்திப் போட, என்னக் கூப்டாங்க.
என்ன செய்றதுன்னு தெரியாமத் தயங்கி நின்னேன். கடி நாய்க்கு எம்மேல அம்புட்டு ஆச, ஆனாலும், மொரடன், ஊர் சுத்தி, நிலையான வேல கெடையாது.
நான் கனவு கனவு கண்டது மாதிரி ராச குமாரன் இவரு.
ரெண்டு பேருல யாரக் கை நீட்டனு தெரியாம திகைச்சு நின்னேன்.
"சொல்லுமா... ரெண்டு பேருல யாரப் பிடிச்சிருக்கு..? சொல்லு.." எல்லாரும் கட்டாயப் படுத்த, யோசிச்சு நின்னேன்..
--------------------------------
யாரை ஓவம்மா திருமணம் செய்தால்? வாசிக்கலாம், அடுத்த பகுதியில்.

கருத்துகள்
கருத்துரையிடுக