செவ்வாய், ஜூலை 03, 2012

சோசியம்

அவனும் அவளும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார்கள். அவர்களே நினைத்துப் பார்க்கவில்லை, பெற்றோரிடம் சொன்னதும் உடனடியாக சம்மதம் கிடைக்கும் என்று.

ஆனால், தங்களைத் தாங்களே கிள்ளிக் கொண்டு, நம்பினார்கள். ஆனந்தமாக உணர்ந்தார்கள். தாங்கள் திருமணத்தில் என்னென்ன பதார்த்தங்கள் பரிமாறுவது, என்ன உடை அணிவது, உடையின் நிறம், இப்படி எல்லாவற்றையும் கலந்து பேசத் தொடங்கி இருந்தார்கள்.

அவர்களது வீட்டிலும், இரு குடும்பத்தாரும் கலந்து பேசி, ஜோதிடம் பார்க்க முடிவு செய்தார்கள். 

"பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் அம்சமா இருக்கு. ஜாதகம் நல்லாப் பொருந்துது, ஆனா ஒரே ஒரு சிக்கல்", என்று இழுத்தார் அந்தப் பெரிய பட்டை அடித்திருந்த ஜோசியர்.

"என்ன சாமி? என்ன?", பதறி விட்டிருந்தனர் ஜோசியம் கேக்கச் சென்றிருந்த அந்தப் பையனின் பெற்றோர்.

"உங்க பையனுக்கு இப்போ நேரம் சரி இல்லம்மா, கல்யாணம்னு பேச்சு இப்போ எடுத்தாலே தடங்கல் வரும், அவருக்கு விபத்து ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கு. அப்புறம் அந்தப் பொண்ணுக்கு தோஷம் இருக்கு, ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சா, மாப்ள உயிருக்கு ஆபத்து. மாப்ளைக்கு ஆயிசு கம்மின்னு சொல்லுதுமா ஜாதகம்.", குண்டு போட்டார் ஜோசியர்.

இந்த அதிர்ச்சியைக் கேட்ட பையனின் பெற்றோர், திருமணத்தை, நிறுத்தினார்கள்.

அவர்களுக்குத் திருமணம் நடக்கவில்லை, ஆனால், சொர்கத்தில் வாழ்கிறார்கள், கணவன் மனைவியாக.

நடப்பது தான் நடக்கும்!

உங்களது கருத்துக்கு மாறாக இந்தக் கதைக் கரு இருந்தால், மன்னிக்கவும். யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.

7 கருத்துகள்:

 1. பெயரில்லா7/04/2012 12:04 முற்பகல்

  ஜோசியர் வில்லனாக மாறியது வருத்தமாகப் போய்விட்டது கண்மணி. நல்ல கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மா. அதாவது நடப்பது நடக்கத்தான் செய்யும், ஒருவன் இறந்து போவான் என்று இருப்பின், அது நடந்தே தீரும், அதற்க்கு காரணமாக, ஜோதிடம் கூட இருக்கலாம் என்கிற சாயலில் எழுதினேன்.

   நீக்கு
 2. ஜோதிடத்தை மட்டுமே நம்பி வாழ்வோர் பார்க்க வேண்டிய பதிவு சகோதரி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  பதிலளிநீக்கு
 3. கண்மணி, சில சமயங்களில் ஜோதிடம் ஏன் மனிதர்களிடம் இப்படி
  இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறதோ ? தலைஎழுத்தை மாற்ற வழியே இல்லையோ ?
  விதியை வென்றோர் இவ்வுலகில் இல்லவே இல்லையோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம். நடக்க இருப்பதை கணிக்க முயற்சிக்காமல், நல்லதைச் செய்து வாழ்ந்து வந்தால், என்றும் நல்லதே நடக்கும். விதி முடிவது, என்றேனும் முடியத்தானே போகிறது? அதை நினைத்து வருந்துவானேன்?

   நீக்கு